Published : 25 Sep 2025 06:51 AM
Last Updated : 25 Sep 2025 06:51 AM

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்: இந்திய வீரர்கள் முதலிடத்தில் நீடிப்பு

துபாய்: சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் வீரர்​களுக்​கான தரவரிசை பட்​டியலை ஐசிசி நேற்று வெளி​யிட்​டது. இதில், பேட்​டிங்​கில் இந்​தி​யா​வின் அபிஷேக் சர்​மா​வும், பந்து வீச்​சில் வருண் சக்​ர​வர்த்​தி​யும், ஆல்​ர​வுண்​டரில் ஹர்​திக் பாண்​டி​யா​வும் முதலிடத்​தில் தொடர்​கின்​றனர்.

கடந்த வாரம் வெளி​யிடப்​பட்​டியலில் முதன்​முறை​யாக முதலிடத்​துக்கு முன்​னேறி​யிருந்த வருண் சக்​ர​வர்த்தி கூடு​தலாக 14 புள்​ளி​களை பெற்று 747 புள்​ளி​களு​டன் முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார். பாகிஸ்​தான் அணி​யின் சுழற்​பந்து வீச்​சாள​ரான அப்​ரார் அகமது 12 இடங்​கள் முன்​னேறி 703 புள்​ளி​களு​டன் 4-வது இடத்தை பிடித்​துள்​ளார்.

இலங்​கை​யின் வனிந்து ஹசரங்கா ஓர் இடம் முன்​னேறி 7-வது இடத்​தை​யும், வங்​கதேசத்​தின் முஸ்​டாபிஸூர் ரஹ்​மான் 6 இடங்​கள் முன்​னேறி 9-வது இடத்​தை​யும் பிடித்து உள்​ளனர். ஆப்​கானிஸ்​தானின் ரஷித் கான் ஓர் இடம் முன்​னேறி 10-வது இடத்​தில் உள்​ளார்.

ஆசிய கோப்பை தொடரில் சூப்​பர் 4 சுற்​றில் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ராக 74 ரன்​கள் விளாசிய இந்​தி​யா​வின் அபிஷேக் சர்மா 907 புள்​ளி​களு​டன் பேட்​ஸ்​மேன்​களுக்​கான தரவரிசை​யில் முதலிடத்​தில் தொடர்​கிறார். திலக் வர்​மா, கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் ஆகியோர் தலா ஓர் இடம் முன்​னேறி முறையே 3 மற்​றும் 6-வது இடத்​தில் உள்​ளனர்.

பாகிஸ்​தான் அணி​யின் சாஹிப்​ஸாதா ஃபர்​ஹான் 31 இடங்​கள் முன்​னேறி 24-வது இடத்தை பிடித்​துள்​ளார். இந்​திய அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அவர், 58 ரன்​கள் அடித்​திருந்​தார். ஆல்​ர​வுண்​டர்​களுக்​கான தரவரிசை​யில் இந்​தி​யா​வின் ஹர்​திக் பாண்​டியா 238 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் தொடர்​கிறார். அதேவேளை​யில் பந்து வீச்​​சாளர்​களுக்​​கான தரவரிசை பட்​டியலில்​ அவர்​, 6 இடங்​கள்​ முன்​னேறி 60-வது இடத்​தை பிடித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x