Published : 25 Sep 2025 06:29 AM
Last Updated : 25 Sep 2025 06:29 AM

சிட்னி தண்டரில் அஸ்வின்!

சிட்​னி: ஆஸ்​​திரேலி​யா​வில் நடைபெறும் பிக் பாஷ் டி 20 தொடரில் சிட்னி தண்​டர் அணி​யில் இந்​​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான
ரவிச்​சந்​​திரன் அஸ்​​வின் இணைய உள்​ளார். இதன் மூலம் பிக் பாஷ் லீக்​கில் விளை​யாடும் முதல் இந்​​தியர் என்ற பெருமையை அவர், பெற உள்​ளார்.

39 வயதான அஸ்​​வின் கடந்த ஆண்டு டிசம்​பரில் சர்​வதேச கிரிக்​கெட்​டில் இருந்து ஓய்வு பெற்​றிருந்​தார். அதைத் தொடர்​ந்து கடந்த மாதம் ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெறுவ​தாக அறி​வித்​தார். இந்​நிலை​யில் அஸ்​​வின் பிக் பாஷ் டி 20 தொடரில் சிட்னி தண்​டர் அணி​யில் இணைய உள்​ள​தாக ஆஸ்​​திரேலி​யா​வில் உள்ள ஃபாக்ஸ் இணையதளம் செய்தி வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பான அறி​விப்பை சிட்னி தண்​டர் அணி விரை​வில் வெளி​யிடக்​கூடும் என எதிர்​பார்​க்​கப்​படுகிறது. மேலும் ஐஎல்​டி20 தொடருக்​கான வீரர்கள் ஏலப்​பட்​டியலிலும் அஸ்​​வின் தனது பெயரை சேர்​த்​துள்​ளார். இந்த தொடர் வரும் டிசம்​பர் 2 முதல் ஜனவரி 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்​கேற்​கும் அஸ்​​வின் அதன் பின்​னர் பிக் பாஷ் டி 20 தொடரின் பிற்​பகு​தி​யில் சிட்னி தண்டர் அணியுடன் இணையக்கூடும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x