Published : 25 Sep 2025 06:16 AM
Last Updated : 25 Sep 2025 06:16 AM

கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ் தோல்வி

​சுவோன்: கொரியா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் கொரி​யா​வில் உள்ள சுவோன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் ஹெச்​.எஸ்​.பிர​னாய், இந்​தோ​னேஷி​யா​வின் சிகோ அவுரா ட்வி வார்​டோயோவுடன் மோதி​னார். இதில் பிர​னாய் முதல் செட்​டில் 5-8 என பின்​தங்​கிய நிலை​யில் இருந்த போது காயம் அடைந்​தார்.

வலது விலா எலும்பு பகு​தி​யில் காயம் அடைந்த அவர், சிகிச்சை எடுத்​துக் கொண்டு தொடர்ந்து விளை​யாடி​னார். ஆனால் அவர், அசவு​கரிய​மாக உணர்ந்​த​தால் போட்​டி​யில் இருந்து வில​கி​னார். அப்​போது சிகோ அவுரா ட்வி வார்​டோயோ 16-8 என முன்​னிலை​யில் இருந்​தார். பிர​னாய் வில​கிய​தால் சிகோ அவுரா ட்வி வார்​டோயோ 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்ற ஆட்​டங்​களில் இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி 18-21, 18-21 என்ற நேர் செட் கணக்​கில் சீன தைபே​வின் சு லி யாங்​கிடம் தோல்வி அடைந்​தார். கிரண் ஜார்ஜ் 14-21, 22-20, 14-21 என்ற செட் கணக்​கில் போராடி முன்​னாள் உலக சாம்​பிய​னான சிங்​கப்​பூரின் லோ கீயனிடம் வீழ்ந்​தார். மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் அனுபமா உபாத்​யாயா 16-21, 15-21 என்ற செட் கணக்​கில் உலக தரவரிசை​யில் 8-வது இடத்​தில் உள்ள இந்​தோ​னேஷி​யா​வின் புத்ரி வர்​தானி​யிடம் தோல்வி அடைந்​தார்.

ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் மோஹித் ஜக்​லான், லக் ஷிதா ஜக்​லான் ஜோடி 7-21, 14-21 என்ற செட் கணக்​கில் யுஷி ஷிமோ​காமி, சயா​கா ஹோப்​ரா ஜோடியிடம் வீழ்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x