Published : 24 Sep 2025 06:46 AM
Last Updated : 24 Sep 2025 06:46 AM

ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி: வங்கதேசத்துடன் இன்று மோதல்

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா - வங்​கதேச அணி​கள் மோதுகின்​றன. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் முதல் அணி​யாக இறு​திப் போட்​டி​யில் கால்​ப​திக்​கும்.

ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் சூப்​பர் 4 சுற்​றில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை தோற்​கடித்​தது. இந்​நிலை​யில் 2-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி இன்று இரவு வங்​கதேசத்​துடன் மோதுகிறது. இரு அணி​களும் சர்​வ​தேச டி 20-ல் 17 முறை நேருக்கு நேர் மோதி உள்​ளன. இதில் வங்​கதேச அணி ஒரே ஒரு முறை மட்​டும் வெற்றி கண்​டிருந்​தது.

பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் பந்து வீச்சு மற்​றும் பீல்​டிங்​கில் சிறிது தடு​மாற்​றம் கண்​டிருந்​தது. இந்த விஷ​யங்​களில் இந்​திய அணி கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். பேட்​டிங்​கில் அதிரடி​யாக விளை​யாடி 74 ரன்​கள் விளாசிய அபிஷேக் சர்​மா, 47 ரன்​கள் சேர்த்த ஷுப்​மன் கில் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்​னிங்ஸ் வெளிப்​படக்​கூடும்.

இதே​போன்று பந்து வீச்​சில் திருப்பு முனையை ஏற்​படுத்​திக் கொடுத்த ஷிவம் துபே​வும் மீண்​டும் ஒரு​முறை உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தக்​கூடும். சுழலில் குல்​தீப் யாதவ், வருண் சக்​ர​வர்த்​தி, அக்​சர் படேல் கூட்​டணி வங்​கதேச அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் அதிக ரன்​களை விட்​டுக்​கொடுத்​திருந்த ஜஸ்​பிரீத் பும்ரா பார்​முக்கு திரும்​புவ​தில் முனைப்பு காட்​டக்​கூடும்.

லிட்​டன் தாஸ் தலை​மையி​லான வங்​கதேச அணி தடு​மாறியே சூப்​பர் 4 சுற்​றுக்கு நுழைந்​திருந்​தது. எனினும் அந்த அணி சூப்​பர் 4 சுற்​றில் தனது முதல் ஆட்​டத்​தில் இலங்கை அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 169 ரன்​களை இலக்கை விரட்​டிய வங்​கதேச அணி ஒரு பந்து மீதம் இருக்​கை​யில் வெற்​றியை வசப்​படுத்​தி​யிருந்​தது.

இது ஒரு​புறம் இருக்க டி 20 கிரிக்​கெட்​டில் வங்​கதேச அணி தொடர்ச்​சி​யாக வலு​வான செயல் திறனை வெளிப்​படுத்​தி​யது இல்​லை. மேலும் அந்த அணி​யின் செயல் திறன் பலம் வாய்ந்த இந்​தி​யா​வுடன் ஒப்​பிடக்​கூடிய​தாக இருந்​தது கிடை​யாது. இந்​திய அணி​யின் திட்​டங்​கள் அனைத்​தும் சரி​யாக அமைந்​தால் மீண்​டும் ஒரு பெரிய அளவி​லான வெற்​றி​யுடன் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறு​வதை உறுதி செய்​யும்.

எனினும் டி 20 வடிவத்​தின் நிலை​யற்ற தன்​மை​யும், அந்த அணி​யின் வலு​வான சுழற்​பந்து வீச்​சும் இந்​திய அணிக்கு ஆச்​சரி​யம் அளிக்க வாய்ப்பு உள்​ளது. ஆனால் இரண்டு அணி​களி​லும் உள்ள பேட்​ஸ்​மேன்​களின் தரத்​தில் உள்ள இடைவெளி பெரிய வித்​தி​யாச​மாக இருக்​கும். இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 210 ஸ்டிரைக் ரேட்​டில் ரன் வேட்​டை​யாடி வரு​கிறார். மற்​றொரு தொடக்க வீர​ரான ஷுப்​மன் கில்​லின் ஸ்டிரைக் ரேட் 158 ஆக இருக்​கிறது.

வங்​கதேச அணி​யில் லிட்​டன் தாஸின் ஸ்டிரைக் ரேட் 129 ஆகவும், தவூஹித் ஹிர்​டோ​யின் ஸ்டிரைக் ரேட் 124 ஆகவும் உள்​ளது. பந்து வீச்சை பொறுத்​தவரையில் சுழலில் ரிஷாத் ஹோசைன், மெஹதி ஹசன் இந்​திய பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் தஸ்​கின் அகமது, முஸ்​டாபிஸூர் ரஹ்​மான், தன்​ஸிம் ஹசன் சாஹிப்​ நம்​பிக்​கை அளிக்​கக்​கூடியவர்​களாக உள்​ளனர்.

‘இந்திய அணியை வீழ்த்தலாம்’ - வங்​கதேச அணி​யின் தலைமை பயிற்​சி​யாளர் பில் சிம்​மன்ஸ் கூறும்​போது, “எந்த ஒரு அணிக்​கும் இந்​திய அணியை வீழ்த்​தக் கூடிய திறன் இருக்​கிறது. போட்டி நாளில் என்ன நடக்​கிறது என்​பது​தான் மிக​வும் முக்​கி​யம். இந்​திய அணி கடந்த 4 போட்​டிகளில் தொடர்ச்​சி​யாக வெற்றி பெற்​றுள்​ளது என்​ப​தெல்​லாம் முக்​கியமல்ல. போட்டி நடை​பெறும் மூன்​றரை மணி நேரத்​தில் என்ன நடக்​கிறது என்​பது​தான் முக்​கி​யம்.

நாங்​கள் களத்​தில் எங்​களால் முடிந்த அனைத்​தை​யும் செய்​வோம், இந்​தி​யா​வின் உத்​தி​யில் ஏதேனும் பலவீனங்​களைக் கண்​டறிவோம். அப்​படித்​தான் எங்​கள் வெற்​றிகளைப் பெறு​வதை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளோம். உலகின் சிறந்த டி20 அணி​யான இந்​தி​யா​வுக்கு எதி​ரான போட்டி என்​றால், எப்​போதும் அதிக அளவி​லான எதிர்​பார்ப்பு இருக்​கும். இந்​தி​யா​வுக்கு எதி​ரான சவாலை எதிர்​கொள்ள நாங்​கள் தயா​ராக இருக்​கிறோம்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x