Published : 21 Sep 2025 10:27 PM
Last Updated : 21 Sep 2025 10:27 PM
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியின் சாஹிப்ஜாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான் இருவரும் ஓப்பனிங் செய்தனர். இதில் ஃபர்ஹான் 45 பந்துகளில் அரை சதம் கடந்து (58 ரன்கள்) அசத்தினார். மறுமுனையில் ஆடிய ஃபகார் ஜமான் 15 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய சயீம் அயூப் 21 ரன்கள், ஹுசைன் டலத் 10 ரன்கள், முகமது நவாஸ் 21, சல்மான் அலி அகா 17, ஃபஹீம் அஷ்ரம் 20 ரன்கள் என 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 171 ரன்கள் எடுத்திருந்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரின் அதிகபட்ச இலக்கு இதுவே. ஷிவம் டுபே 2 விக்கெட், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT