Published : 20 Sep 2025 07:13 AM
Last Updated : 20 Sep 2025 07:13 AM

வரலாறு படைக்குமா இந்திய மகளிர் அணி?

புதுடெல்லி: ஆஸ்​திரேலிய மகளிர் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது.

இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடர் 1-1 என சமநிலை​யில் உள்​ளது. முதல் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. 2-வது ஆட்​டத்​தில் 102 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று இந்​திய மகளிர் அணி பதிலடி கொடுத்​தது.

இந்​நிலை​யில், தொடரை வெல்​வது யார் என்​பதை தீர்​மானிக்​கும் கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் போட்​டி​யில் டெல்​லி​யில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெற்​றால் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக முதன்​முறை​யாக இருதரப்பு தொடரை கைப்​பற்றி சாதனை படைக்​கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x