Published : 20 Sep 2025 06:54 AM
Last Updated : 20 Sep 2025 06:54 AM

சென்னையில் செப். 26-ம் தேதி சர்வதேச பிக்கிள்பால் போட்டி!

கோப்புப்படம்

சென்னை: ரைஸ் அப் சாம்​பியன்​ஷிப் அறக்​கட்​டளை சார்​பில் சர்​வ​தேச பிக்​கிள்​பால் போட்டி வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னை விஜிபி கோல்​டன் பீச் ரிசார்ட்​டில் நடை​பெறுகிறது. இந்த போட்​டி​யுடன் இசை திரு​விழா​வும் இணைந்து நடத்​தப்​படு​கிறது.

3 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டியை இந்​தியா பிக்​கிள்​பால் கூட்​டமைப்​பு, தமிழ்​நாடு பிக்​கிள்​பால் சங்​கம், டைனமிக் யுனிவர்​செல் பிக்​கிள்​பால் ரேட்​டிங், பிக்​கிள்​பால் உலக ரேங்​கிங் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்​துகின்​றன.

இந்த போட்டி 1,000 புள்​ளி​களை கொண்​ட​தாகும். இதில் உலகம் முழு​வ​தி​லும் உள்ள முன்​னணி வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்ள உள்​ளனர். ஆடவர் ஒற்​றையர், மகளிர் ஒற்​றையர், ஆடவர் இரட்​டையர், மகளிர் இரட்​டையர் மற்​றும் கலப்பு இரட்​டையர் பிரிவு​களில் போட்​டிகள் நடை​பெற உள்​ளன. இதில் சாம்​பியன் பட்​டம் வெல்பவருக்கு ரூ.25 லட்​சம் பரிசுத் தொகை வழங்​கப்​பட உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x