Published : 19 Sep 2025 07:53 AM
Last Updated : 19 Sep 2025 07:53 AM

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: கால் இறுதியில் பி.வி.சிந்து

ஷென்சென்: சீனா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் சீனா​வில் உள்ள ஷென்​சென் நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் ஒலிம்​பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, போட்​டித் தரவரிசை​யில் 6-வது இடத்​தில் உள்ள தாய்​லாந்​தின் சோச்​சு​வாங்கை எதிர்த்து விளை​யாடி​னார். 41 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் பி.​வி.சிந்து 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

ஆடவர் இரட்​டையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி​யானது சீன தைபே​வின் ஹ்சி​யாங் சியே சியு, வாங் சி-லின் ஜோடியை எதிர்த்து விளை​யாடியது. இதில் சாட்விக்​-ஷி​ராக் ஜோடி 21-13, 21-12 என்ற செட் கணக்​கில் எளி​தாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றில்​ கால்​ப​தித்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x