Published : 19 Sep 2025 07:43 AM
Last Updated : 19 Sep 2025 07:43 AM

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - ஓமன் இன்று மோதல்

அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு அபு​தாபி​யில் நடை​பெறும் கடைசி லீக் ஆட்​டத்​தில் இந்​தியா - ஓமன் அணி​கள் மோதுகின்​றன.

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி முதல் ஆட்​டத்​தில் 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ஐக்​கிய அரபு அமீரக அணியை தோற்​கடித்​திருந்​தது. தொடர்ந்து பாகிஸ்​தான் அணியை 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது.

இதன் மூலம் 4 புள்​ளி​களு​டன் இந்​திய அணி சூப்​பர் 4 சுற்​றுக்கு முன்​னேறியது. இந்​நிலை​யில் இந்​திய அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் இன்று ஓமன் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 8 மணிக்கு அபு​தாபி​யில் உள்ள ஷேக் சயீத் மைதானத்​தில் நடை​பெறுகிறது. சூப்​பர் 4 சுற்​றுக்கு இந்​திய அணி முன்​னேறி​விட்​ட​தால் இன்​றைய ஆட்​டத்தை இந்​திய அணி​யின் பேட்​ஸ்​மேன்​கள் சிறந்த முறை​யில் பயன்​படுத்​திக் கொள்​வ​தில் முனைப்பு காட்​டக்​கூடும்.

முதல் 2 ஆட்​டங்​களி​லும் இந்​திய அணி குறைந்த அளவி​லான இலக்​கையே துரத்தி வெற்றி கண்​டிருந்​தது. இதனால் பேட்​ஸ்​மேன்​கள் களத்​தில் போதிய அளவு நேரத்தை செல​விடும் வகை​யில் இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி டாஸை வெல்​லும் பட்​சத்​தில் பேட்​டிங்கை தேர்வு செய்ய வாய்ப்பு உள்​ளது.

போதிய அளவி​லான ஓய்வு இருந்​துள்​ள​தால் இந்​திய அணி​யின் விளை​யாடும் லெவனில் பெரிய அளவி​லான மாற்​றங்​கள் இருப்​ப​தற்கு வாய்ப்பு குறைவு​தான்.

ஜதிந்​தர் சிங் தலை​மையி​லான ஓமன் அணி பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 161 ரன்​களை துரத்​திய நிலை​யில் 67 ரன்​களுக்​கும், ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 173 ரன்​களை துரத்​திய போது 130 ரன்​களுக்​கும் ஆட்​ட​மிழந்து தோல்​வியை சந்​தித்து இருந்​தது. இந்த இரு ஆட்​டங்​களி​லும் அந்த அணி​யில் உள்ள எந்த ஒரு பேட்​ஸ்​மேனும் ஒரு முறை கூட 30 ரன்​களை எட்​ட​வில்​லை. அதி​கபட்​ச​மாக ஹம்​மத் மிர்ஸா 27 ரன்​களும், ஆர்​யன் பிஷ்த் 24 ரன்​களும் எடுத்​திருந்​தனர். பலமில்​லாத அந்த அணி​யின் பேட்​டிங் வரிசை இந்​திய பந்து வீச்சு துறை​யிடம் இருந்து கடும் சவால்​களை சந்​திக்​கக்​கூடும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x