Published : 18 Sep 2025 04:16 AM
Last Updated : 18 Sep 2025 04:16 AM
துபாய்: ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசையில் அவர், முதலிடத்தை பிடிப்பது இதுவே முதன்முறையாகும்.
34 வயதான வருண் சக்ரவர்த்தி இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2-வது இடத்தை பிடித்திருந்தார். தற்போது அவர், 733 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி நியூஸிலாந்தின் ஜேக்கப் டஃபியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை அடைந்துள்ளார். ஜேக்கப் டஃபி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து டாப்பில் இருந்து வந்தார்.
34 வயதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 4 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தையும், சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தையும், ஆல்ரவுண்டரான அக்சர் படேல் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் தொடர்கிறார். அபிஷேக் சர்மா 4 இடங்கள் முன்னேறி 14-வது
இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் சர்மா 884 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
ஷுப்மன் கில் 4 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தை பிடித்துள்ளர். திலக் வர்மா 2 இடங்களை இழந்து 4-வது இடத்துக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு இடத்தை இழந்து 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT