Published : 17 Sep 2025 07:01 AM
Last Updated : 17 Sep 2025 07:01 AM
லக்னோ: இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லக்னோவில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு சேம் கான்ஸ்டாஸ், கேம்ப்பெல் கெல்லவே ஜோடி அபாரமான தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடி 37 ஓவர்களில் 198 ரன்கள் குவித்த பிறகே பிரிந்தது. கேம்ப்பெல் கெல்லவே 97 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் விளாசிய நிலையில் குர்னூர் பிரார் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் நேதன் மெக்ஸ்வீனி 1 ரன்னில் ஹர்ஷ் துபே பந்தில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி சதம் அடித்த சாம் கான்ஸ்டாஸ் 144 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் விளாசிய நிலையில் ஹர்ஷ் துபே பந்தில் போல்டானார். இதன் பின்னர் ஆலிவர் பீக் 2 ரன்னில் நடையை கட்ட அதிரடியாக விளையாடிய கூப்பர் கானொலி 84 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் துபே பந்தில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 73 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. லியாம் ஸ்காட் 47, ஜோஷ் பிலிப் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் ஹர்ஷ் துபே 3 விக்கெட்களை வீழ்த்தினார். கலீல் அகமது, குர்னூர் பிரார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT