Published : 02 Sep 2025 11:02 AM
Last Updated : 02 Sep 2025 11:02 AM

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணி 503 ரன் குவிப்பு

சென்னை: புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரில் டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர்​திறன் மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 90 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 265 ரன்​கள் எடுத்​திருந்​தது.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் ஆட்ட நேர முடி​வில் 180 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 503 ரன்​கள் குவித்​தது. விமல் குமார் 112, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 91, ஆந்த்ரே சித்​தார்த் 57, அஜிதேஷ் 101, அம்ப்​ரிஷ் 62 ரன்​கள் விளாசினர். ஜம்மு & காஷ்மீர் அணி தரப்​பில் குவல்​பிரீத் சிங், தஸிம் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

குரு​நானக் கல்​லூரி​யில் நடை​பெற்று வரும் அரை இறுதி ஆட்​டத்​தில் ஹரி​யானா - ஹைத​ரா​பாத் அணி​கள் விளை​யாடி வரு​கின்​றன. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஹைத​ரா​பாத் 225 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தொடர்ந்து விளை​யாடிய ஹரி​யானா முதல் நாள் ஆட்​டத்​தில் விக்​கெட் இழப்​பின்றி 14 ரன்​கள் எடுத்​திருந்​தது.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய அந்த அணி 79.3 ஓவர்​களில் 208 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஹிமான்சு ராணா 75, பர்த் வட்ஸ் 36 ரன்​கள் சேர்த்​தனர். ஹைத​ரா​பாத் அணி தரப்​பில் ரோஹித் ராயுடு 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். 17 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஹைத​ரா​பாத் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 16 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 49 ரன்​கள்​ எடுத்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x