Published : 27 Aug 2025 09:31 AM
Last Updated : 27 Aug 2025 09:31 AM

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு அல்கராஸ் முன்னேற்றம் - மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 67-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ரெய்லி ஒபல்காவை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-4, 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

5-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜாக் டிராப்பர் 6-4, 7-5, 6-7 (7-9), 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் பெட் ரிகோ கோம்ஸையும், 9-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் 6-7 (5-7), 6-3, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் நிஷேஷ் பசவரெட்டியையும், 15-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லேவ் 6-1, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியாவின் புனோ பிரிமிக்கையும் வீழ்த்தி 2-வது கற்றுக்கு முன்னேறினர்.

11-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் 6-3, 7-6 (7-4), 7-6 (7-2) என்ற செட் கணக்​கில் நெதர்​லாந்​தின் போடிக் வான் டி சாண்ட்​ஸ்​கல்​பை​யும், 12-ம் நிலை வீர​ரான நார்​வே​யின் காஸ்​பர் ரூடு 6-1, 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்​கில் ஆஸ்​திரி​யா​வின் செபாஸ்​டியன் ஆஃப்​னரை​யும், 17-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பிரான்​சஸ் தியாஃபோ 6-3, 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்​கில் ஜப்​பானின் யோஷிடோ நிஷியோ​காவை​யும் தோற்​கடித்து 2-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

பெட்ரா விட்​டோவா தோல்வி: மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 6-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் மேடிசன் கீஸ், 82-ம் நிலை வீராங்​க​னை​யான மெக்​சிகோ​வின் ரெனாட்டா ஜராசு​வாவுடன் மோதி​னார். 3 மணி நேரம் 10 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ரெனாட்டா ஜராசுவா 6-7 (10-12), 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்​கில் மேடிசன் கீஸை வீழ்த்தி 2-வது சுற்​றில் கால்​ப​தித்​தார்.

9-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா 6-3, 6-0 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் ஜூலியட்டா பரேஜாவை​யும், 11-ம் நிலை வீராங்​க​னை​யான செக்​குடியரசின் கரோலினா முச்​சோவா 6-3, 2-6, 6-1 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் வீனஸ் வில்​லி​யம்​ஸை​யும், 15-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் தரியா கஸட்​கினா 7-5, 6-1 என்ற செட் கணக்​கில் ருமேனி​யா​வின் கேப்​ரியலா ரூஸை​யும், 17-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் லியுட்​மிலா சாம்​சோனோவா 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்​கில் சீனா​வின் யுவான் யூவை​யும் வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

செக்​குடிரயசின் பெட்ரா விட்​டோவா 1-6, 0-6 என்ற செட் கணக்​கில் பிரான்​ஸின் டயான் பாரி​யிட​மும், பிரான்​ஸின் கரோலின் கார்​சியா 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்​கில் ரஷ்​யா​வின் கமிலா ரகிமோ​வா​விட​மும்​ தோல்​வி அடைந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x