Published : 19 Aug 2025 07:34 AM
Last Updated : 19 Aug 2025 07:34 AM

ஆசிய கோப்பை தொடருக்கு வீரர்கள் இன்று தேர்வு: இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்க வாய்ப்பு?

புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேரை உள்ளடக்கிய இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று (19-ம் தேதி) நடைபெற உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் தற்போது டி20 திறமையாளர்களின் தொழிற்சாலையாக உள்ளது. குறைந்தது 30 வீரர்கள் தேசிய அணிக்கு விளையாட தயார் நிலையில் உள்ளனர். இந்த வகையில் ஒரு இடத்துக்கு மூன்று முதல் நான்கு வீரர்கள் விளையாடுவதற்கு தகுதியுடன் உள்ளனர்.

முதல் மூன்று இடங்​களுக்​கு, ஒரே மாதிரி​யான திறன்​களை கொண்ட 6 வீரர்​கள் கைவசம் உள்​ளனர். கடந்த சீசனில் அபிஷேக் சர்​மா, சஞ்சு சாம்​சன், திலக் வர்மா ஆகியோர் அற்​புத​மாக விளை​யாடினர். இவர்​களுக்கு இணை​யாக ஷுப்​மன் கில், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், சாய் சுதர்​சன் ஆகியோ​ரும் உள்​ளனர். சுழற்​பந்து வீச்​சில் அணிக்கு தேர்​வாவ​தில் குல்​தீப் யாதவ், வருண் சக்​ர​வர்த்​தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் இடையே போட்டி நில​வக்​கூடும்.

இது ஒரு​புறம் இருக்க கடந்த சீசனில் இந்​திய அணி​யின் விளை​யாடும் லெவனில் இடம் பெற்​றவர்​கள் அப்​படியே தொடரக்​கூடும் எனவும் கூறப்​படு​கிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய டி 20 அணி கடைசி​யாக விளை​யாடிய 20 ஆட்​டங்​களில் 17-ல் வெற்​றிகளை குவித்​திருந்​தது. இதன் வெற்றி சதவி​கிதம் 85 ஆகும். இந்த ஆட்​டங்​களில் ஷுப்​மன் கில், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் இடம் பெற​வில்​லை.

ஆனால் இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​துக்கு பின்​னர் நிலைமை மாறி உள்​ளது. டெஸ்ட் போட்​டிகளில் கேப்​ட​னாக ஷுப்​மன் கில் தனது முத்​திரையை பதித்​துள்​ளார். வணிக நோக்​கில் பெரிய பிராண்​டாக ஷுப்​மன் கில் உரு​வெடுத்​துள்​ளார். இதனால் அவரையே டெஸ்ட், டி20, ஒரு​நாள் போட்டி ஆகிய​வற்​றுக்கு கேப்​ட​னாக நியமிக்​கப்​படு​வதற்​கான வாய்ப்​பு​களும் உள்​ளன. இது தற்​போது நிகழா​விட்​டாலும், அதற்​கான காலம் வெகுதொலை​வில் இல்லை என்றே கிரிக்​கெட் வட்​டார தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

கடந்த ஒரு வருட​மாக ஷுப்​மன் கில்​லும், ஜெய்​ஸ்​வாலும் டெஸ்ட் போட்​டிகளில் மும்​முர​மாக ஈடு​படு​வதற்கு முன்​பு, அவர்​கள் டி20 சர்​வ​தேச போட்​டிகளில் விளை​யாடி வந்​தனர், மேலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்​பாக செயல்​பட்​டனர். டெஸ்ட் கிரிக்​கெட் காரண​மாக டி 20 போட்​டிகளில் இருந்து விலக வேண்​டிய கட்​டா​யம் ஏற்​படு​வதற்கு முன்​னர் ஷுப்​மன் கில், சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான டி 20 அணிக்கு துணை கேப்​ட​னாக இருந்​தார்.

இன்​றைய தேர்​வில் ஷுப்​மன் கில் டி 20 அணிக்​குள் கொண்​டு​வரப்​பட்​டால் தொடக்க வீரர்​களில் சஞ்சு சாம்​சன், அபிஷேக் சர்மா அல்​லது திலக் வர்மா ஆகியோரில் யாரேனும் ஒரு​வர் பேட்​டிங் வரிசை​யில் தங்​களது இடங்​களை சமரசம் செய்து கொள்ள வேண்​டியது வரும். அதே​நேரம் ரிங்கு சிங் நீக்​கப்​பட​வும் வாய்ப்​பு​ உள்​ளது. ஏனெனில் கடந்த சீசனில் ரிங்கு சிங் அணி​யில் இடம் பெற்ற போதி​லும் அவருக்கு பேட்​டிங் செய்ய போதிய வாய்ப்​பு​கள் கிடைக்​க​வில்​லை. கிடைத்த சில வாய்ப்​பு​களி​லும் அவர், உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​த​வில்​லை.

இங்​கிலாந்து டெஸ்ட் தொடரில் 3 ஆட்​டங்​களில் மட்​டுமே விளை​யாடிய வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜஸ்​பிரீத் பும்ரா மீண்​டும் அணிக்கு திரும்​பக்​கூடும். மேலும் அவருடன் அர்​ஷ்தீப் சிங்​கின் இடமும் உறு​தி​யானது​தான். 3-வது வேகப்​பந்து வீச்​சாள​ராக ஆல்​ர​வுண்​டர் ஹர்​திக் பாண்​டியா இடம் பெறு​வார். இவர்​களு​டன் ஹர்​ஷித் ராணா இடம் பெற வாய்ப்பு உள்​ளது. சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​டர்​களில் அக்​சர் படேல், வாஷிங்​டன் சுந்​தருக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படக்​கூடும்.

அக்​டோபர் மாதம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக இந்​திய அணி உள்​நாட்​டில் டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ள​தால் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோ​ருக்கு ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்​கப்பட வாய்ப்பு உள்​ளது. ரிஷப் பந்த், நித்​திஷ் குமார் ரெட்டி ஆகியோர் காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடைய​வில்​லை. இதனால் 2-வது வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக ஷிவம் துபே சேர்க்​கப்​படக்​கூடும். சஞ்சு சாம்​சன் விக்​கெட் கீப்​பிங் பணியை மேற்​கொள்​ளும் நிலை​யில் 2-வது விக்​கெட்​ கீப்​ப​ராக ஜிதேஷ் சர்​மா அல்​லது துருவ்​ ஜூரெல் இடம் பெறக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x