Published : 17 Aug 2025 10:12 AM
Last Updated : 17 Aug 2025 10:12 AM

அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சை: டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தத்தில் விதிமீறலா? - சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம்

சென்னை: ஐபிஎல் 2025 சீசனின் நடுவில் டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதில், தென் ஆப்பிரிக்க வீரரின் ஒப்பந்தம் லீக்கின் விதிமுறைகளின்படியே இருந்தது என தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது காயம் அடைந்த வேகப் பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்குக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருந்தது. குர்ஜப்னீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரூ.2.20 கோடி தொகைக்கே டெல் வால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் டெ​வால்ட் பிரே​விஸின் அடிப்​படை விலை ரூ.75 லட்​ச​மாகவே இருந்​தது. கடந்த ஆண்டு இறு​தி​யில் நடை​பெற்ற மெகா ஏலத்​தின் போது டெவால்ட் பிரே​விஸை யாரும் வாங்​க​வில்​லை. அவர், விலை​போ​காத வீர​ராக இருந்​தார். ஐபிஎல் விதி​முறை​களின் படி காயம் காரண​மாக அணி​யில் இருந்து வீரர் வில​கி​னால் அவருக்கு என்ன தொகை வழங்​கப்​பட்​டிருந்​ததோ அதே தொகை​யில்​தான் மாற்று வீரரை ஒப்​பந்​தம் செய்ய வேண்​டும். இதன் அடிப்​படை​யில்​தான் டெவால்ட் பிரே​விஸ் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டிருந்​தார்.

தொடரின் பாதி​யில் கிடைத்த வாய்ப்​பில் சிஎஸ்கே அணிக்​காக 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 அரைசதம் உட்பட 225 ரன்​கள் விளாசி கவனத்தை ஈர்த்​தார். இதன் காரண​மாக அடுத்த சீசனில் அவரை சிஎஸ்கே தக்​கவைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் டெவால்ட் பிரே​விஸுக்கு அதிக தொகை கொடுக்க சிஎஸ்கே அணி நிர்​வாகம் தயா​ராக இருந்​த​தாக, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரரும், நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்​காக விளை​யாடிய​வரு​மான ரவிச்​சந்​திரன் அஸ்​வின் தனது யூடியூப் சானலில் சில தினங்​களுக்கு முன்​னர் தெரி​வித்​திருந்​தார்.

அதில் அவர், “டெ​வால்ட் பிரே​விஸ் குறித்து நான் ஒரு விஷ​யத்தை தெரிவிக்க விரும்​பு​கிறேன். சிஎஸ்கே அணிக்​காக பிரெ​விஸ் 2-வது பாதி​யில் மிக​வும் சிறப்​பாக விளை​யாடி​னார். அதற்கு முன்​ன​தாக சில அணி​கள் அவரை வாங்க பேச்​சு​வார்த்தை நடத்​தி​ய​தாக கேள்​விப்​பட்​டேன். ஆனால் அவரது அடிப்​படை விலைக்கு (ரூ.75 லட்​சம்) மேல் கூடு​தலாக பணம் கொடுக்க அந்த அணி​கள் தயா​ராக இல்​லாத​தால் அவர்​களின் பேச்​சு​வார்த்தை தோல்​வியடைந்​தது.

பொது​வாக ஒரு மாற்று வீரரை அணி​யில் அவரது அடிப்​படை விலை​யில் ஒப்​பந்​தம் செய்ய வேண்டி இருக்​கும். ஆனால் சில நேரம் என்ன நடக்​கிறது என்​றால், சிலர் தங்​களுக்கு கூடு​தல் தொகை கொடுத்​தால்​தான் விளை​யாட வரு​வோம் என்று தெரி​விப்​பார்​கள். ஏனெனில் அடுத்த ஆண்டு அதிக தொகைக்கு விலை​போக வாய்ப்​புள்​ளது என்று அவர்​களுக்கு தெரி​யும். டெவால்ட் பிரே​விஸ் கேட்ட தொகையை கொடுக்க சிஎஸ்கே அணி தயா​ராக இருந்​த​தால், அணி​யுடன் இணைந்​தார். இதன் பின்​னர் அணி​யின் சேர்க்கை பலமானது. மினி ஏலத்​துக்கு சிஎஸ்கே அணி ரூ.30 கோடி​யுடன் செல்​லக்​கூடும்” எனத் தெரி​வித்​திருந்​தார்.

அஸ்​வினின் இந்த கருத்து கிரிக்​கெட் வட்​டாரத்​தில் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இந்​நிலை​யில் சிஎஸ்கே அணி நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ‘‘ஐபிஎல் 2025 தொடரில் மாற்று வீர​ராக டெவால்ட் பிரெ​விஸை ஒப்​பந்​தம் செய்​யும் போது அணி எடுத்த அனைத்து நடவடிக்​கைகளும் ஐபிஎல் விதி​கள் மற்​றும் ஒழுங்​கு​முறை​களுக்கு உட்​பட்டே இருந்​தது.

ஏப்​ரல், 2025-ல், காயமடைந்த குர்​ஜப்​னீத் சிங்​கிற்கு மாற்று வீர​ராக டெவால்ட் பிரெ​விஸ் 2.2 கோடி ரூபாய் லீக் கட்​ட​ணத்துக்கு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டார். சவுதி அரேபி​யா​வின் ஜெட்​டா​வில் நடை​பெற்ற மெகா வீரர்​கள் ஏலத்​தின் போது குர்​ஜப்​னீத் சிங்கை ரூ.2.2 கோடிக்கு வாங்​கி​யிருந்​தோம். அதே தொகைக்​கு​தான் டெவால்ட் பிரே​விஸ் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டார்” என தெரி​வித்​துள்​ளது.

ஐபிஎல் 2025 சீசன் தொடங்​கிய போதே அஸ்​வினின் யூடியூப் சானலில் சிஎஸ்கே அணி குறித்து கடும் விமர்​சனங்​கள் கூறப்​பட்​டன. பல வருடங்​களுக்கு பின்​னர் அஸ்​வின் சிஎஸ்கே அணிக்கு திரும்​பிய நிலை​யில், இது விவாதப்​பொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து சீசன் முடி​யும் வரை சிஎஸ்கே அணி தொடர்​பாக தனது சானலில் எந்த கருத்​தும் வெளி​யிட​மாட்​டேன் என அஸ்​வின் கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில் சமீபத்​தில் சிஎஸ்கே அணி நிர்​வாகத்​துடன் அஸ்​வின் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது அணி​யில் தனது எதிர்​காலம் குறித்து அஸ்​வின் வி​வா​தித்​த​தாக கூறப்​படு​கிறது. இதைத்​ தொடர்​ந்​து அஸ்​வின்​ அடுத்​த சீசனில்​ சிஎஸ்​கே அணி​யில்​ இருந்​து விடுவிக்​கப்​படலாம்​ என்​ற ஊகங்​கள்​ வெளிவந்​தன. இந்​நிலை​யில்​ சிஎஸ்​கே அணி​யின்​ விவ​காரங்​களை அஸ்​வின்​ மீண்​டும்​ பேசி உள்​ளது சர்​ச்​சைகளுக்​கு வழிவகுத்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x