Published : 14 Aug 2025 08:33 AM
Last Updated : 14 Aug 2025 08:33 AM

காமன்வெல்த் விண்ணப்பம் சமர்ப்பிக்க ஐஓஏ அனுமதி!

புதுடெல்லி: 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அகமதாபாத்தில் போட்டியை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகளை நடத்​து​வதற்​கான உரிமையை பெறும் ஏலத்​துக்கு விண்​ணப்​பிப்​ப​தற்கு வரும் ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும். இந்​நிலை​யில் இந்​திய ஒலிம்​பிக் சங்​கம் இந்த அனு​ம​தியை வழங்கி உள்​ளது. இந்த போட்​டியை நடத்​து​வதற்​கான அனைத்து செல​வு​களை​யும் மத்​திய அரசு வழங்​கும்.

காமன்​வெல்த் விளை​யாட்டு இயக்​குநர் டேரன் ஹால் சமீபத்​தில் அகம​தா​பாத்​தில் ஆய்து மேற்கு குஜ​ராத் மாநில அரசுடன் ஆலோ​சனை நடத்​தி​னார். இதைத் தொடர்ந்து இந்த மாத இறு​தி​யில் பெரிய குழு ஒன்று அகம​தா​பாத் நகரத்​தில் ஆய்வு செய்ய உள்​ளது.

2030-ம் ஆண்டு காமன்​வெல்த் விளை​யாட்டுப் போட்​டியை நடத்​து​வதற்​கான உரிமத்தை பெறும் ஏலத்​தில் இருந்து கனடா விலகி உள்​ளது. இதனால் இந்த போட்​டியை நடத்​தும் உரிமையை இந்​தியா பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் அதி​கரித்​துள்​ளது. கடைசி​யாக இந்​தியா கடந்த 2010-ம் ஆண்டு காமன்​வெல்த் விளை​யாட்டு போட்​டியை நடத்​தி​யிருந்​தது.

வரும் நவம்​பர் கடைசி வாரத்​தில் கிளாஸ்​கோ​வில் நடை​பெறும் காமன்​வெல்த் விளை​யாட்டு பொதுக்​கூட்​டத்​தில், 2030-ம் ஆண்டு காமன்​வெல்த் விளை​யாட்டு போட்​டியை நடத்​தும் நாடு எது என்​பது முடிவு செய்​யப்பட உள்​ளது.

காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகள் 4 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை நடை​பெறும். இந்த வகை​யில் வரும் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்​கோ​வில் காமன்​வெல்த்​ விளை​யாட்​டு போட்​டி நடைபெற உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x