Published : 11 Aug 2025 03:26 PM
Last Updated : 11 Aug 2025 03:26 PM
குஜராத் அணியின் முன்னாள் கேப்டனும் அருமையான பேட்டருமான பிரியங்க் பஞ்ச்சலின் முதல் தர கிரிக்கெட்டின் அதிகபட்ச ஸ்கோர் 314 நாட் அவுட். 2008-ல் 18 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2015-ல் 35 வயதில் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஒய்வு அறிவித்தார். ஏன் இந்த டி20 ஐபிஎல் பணமழை காலத்திலும் இப்படிப்பட்ட ஓய்வு என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது வாழ்க்கை கிரிக்கெட்டை விடவும் பெரியது என்று தத்துவார்த்தமாகப் பதிலளித்துள்ளார்.
இந்தியா ஏ அணியை வழிநடத்திய பிரியங்க் பஞ்ச்சல், இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் கடந்த மே மாதம் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பிரியங்க் பஞ்சல் தனது எக்ஸ் தளத்தில் ‘என்னை எது வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்ற கேள்வி பதில் அமர்வை நடத்தினார். அப்போது அவரைப் பின் தொடரும் ரசிகர் ஒருவர் ஏன் இவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும் என்று கேட்க அதற்கு பஞ்ச்சல், “ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இரண்டு கரியர்கள் உண்டு. விளையாடும் கரியர் விளையாடாத கரியர் என்று இரண்டு உண்டு.
இந்தியாவுக்காக இனி ஆட முடியாது, வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகே இந்த இரண்டாம் கரியரை கொஞ்சம் முன் கூட்டியே தொடங்குவதுதான் அர்த்தமுள்ள முடிவாக இருக்க முடியும். வாழ்க்கை கிரிக்கெட்டை விட எத்தனை பெரிது!” என்று தத்துவார்த்தமாக விடையிறுத்துள்ளார்.
பிரியங்க் பஞ்ச்சல் 127 முதல் தர போட்டிகளில் 8,856 ரன்களை 45.18 என்ற சராசரியில் 29 சதங்கள், 34 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். இவரது அரைசதத்திலிருது சதமாக மாற்றும் கன்வர்ஷன் ரேட் கோலிக்கு இணையானது. 97 லிஸ்ட் ஏ போட்டிகளில் 3,672 ரன்கள் 40.80 சராசரி. 8 சதங்கள் 21 அரைசதங்கள். 59 டி20 போட்டிகளில் 1522 ரன்கள் 9 அரைசதங்கள்.
பஞ்ச்சல் இந்திய அணியில் இரண்டு முறை இடம்பெற்றார். 2021-ல் ரோஹித் சர்மா காயமடைந்த போது இங்கிலாந்து தொடருக்காக அணியில் மாற்று ரிசர்வ் வீரராகச் சேர்க்கப்பட்டார்.
ஓப்பனிங் பேட்டரான பிரியங்க் பஞ்சலின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2016-17 பொற்காலம் என்று கூறலாம். அந்த ரஞ்சி சீசனில் அவர் 1310 ரன்களை குவித்தார். இந்த சீசனில்தான் 314 ரன்கள் நாட் அவுட் என்ற அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரையும் எட்டினார். இந்த சீசனில்தான் குஜராத் ரஞ்சி கோப்பையையும் வென்றது. 2015-16 விஜய் ஹசாரே கோப்பையை குஜராத் வென்ற போது பிரியங்க் பஞ்ச்சல் அணியில் இருந்தார். 2012-13, பிறகு 2013-14 சையத் முஷ்டாக் அலி டிராபி சாம்பியன் ஆனதிலும் பிரியங்க் பஞ்சல் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT