Published : 08 Aug 2025 06:56 AM
Last Updated : 08 Aug 2025 06:56 AM

125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஜிம்பாப்வே அணி

புலவாயோ: நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் ஜிம்​பாப்வே அணி 125 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

புல​வாயோ நகரில் நேற்று தொடங்​கிய இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி​யானது 48.5 ஓவர்​களில் 125 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பிரண்​டன் டெய்​லர் 44, தஃபட்​ஸ்வா சிகா 33, நிக் வெல்ச் 11, சீயன் வில்​லி​யம்ஸ் 11 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற எந்த பேட்​ஸ்​மேன்​களும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை.

நியூஸிலாந்து அணி சார்​பில் மேட் ஹென்றி 5, ஜகரி ஃபவுல்க்ஸ் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இதையடுத்து விளை​யாடிய நியூஸிலாந்து அணி முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 39 ஓவர்​களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்​கள் எடுத்தது. டேவன் கான்வே 79, ஜேக்கப் டஃபி 8 ரன்களுடன் களத்​தில்​ இருந்​தனர்​. வில்யங் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x