Published : 08 Aug 2025 06:52 AM
Last Updated : 08 Aug 2025 06:52 AM

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டேன்: மனம் திறக்கும் கிறிஸ் வோக்ஸ்

லண்டன்: இந்​தியா - இங்​கிலாந்து அணி​களுக்கு இடையே​யான 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் சமீபத்​தில் முடிவடைந்​தது. லண்​டன் ஓவல் மைதானத்​தில் நடை​பெற்ற கடைசி டெஸ்ட்​டில் இந்​திய அணி 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்​தது.

இந்த தொடரில் மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டி​யின்​போது, இந்​திய அணி​யின் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த்​துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. இங்​கிலாந்து அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது ரிஷப் பந்த்​துக்கு இந்த காயம் ஏற்​பட்​டது. இதனையடுத்​து, அவர் லண்​டனில் நடை​பெற்ற கடைசி டெஸ்ட் போட்​டியி​லிருந்து வில​கி​னார்.

இது ஒரு​புறம் இருக்க 5-வது டெஸ்ட் போட்​டி​யின் முதல் நாளில் பீல்​டிங்​கின் போது கிறிஸ்​வோக்ஸ் தோள்​பட்​டை​யில் காயம் அடைந்​தார். இதனால் அவர், முதல் இன்​னிங்​ஸில் பேட்​டிங் செய்​ய​வில்​லை. ஆனால் 2-வது இன்​னிங்​ஸில் அணி​யின் வெற்​றிக்​காக இடது கை முழு​வதும் கட்​டப்​பட்ட நிலை​யில் ஒற்றை கையுடன் பேட்​டிங் செய்​வதற்​காக கிறிஸ்​வோக்ஸ் களமிறங்​கி​னார். தன்​னால் பேட்​டிங் செய்ய முடி​யாத நிலை​யில் சுமார் 2 ஓவர்​கள் களத்​தில் நின்று மறு​முனை​யில் பேட் செய்த கஸ் அட்​கின்​சனுக்கு ஒத்​துழைப்பு கொடுத்​தார். அவரது இந்த போராட்ட குணத்தை அனை​வரும் பாராட்​டினர்.

இந்​நிலை​யில் கிறிஸ்​வோக்ஸ் கூறும்​போது, “இன்​ஸ்​டாகி​ராமில் என்​னுடைய புகைப்​படத்தை சல்​யூட் எமோஜி​யுடன் ரிஷப் பந்த் பகிர்ந்​துள்​ளார். அதனால், அவருக்கு நான் நன்றி கூறினேன். அவரது அன்​புக்கு என்​னுடைய நன்​றியை தெரி​வித்​தேன். அவரது கால் தற்​போது நன்​றாக இருக்​கும் என நம்​பு​கிறேன். என்​னுடைய பந்​து​வீச்​சில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​ட​தால், அவரிடம் மன்​னிப்பு கேட்​டேன். காயத்​துடன் ஓவல் டெஸ்ட்​டில் நான் களமிறங்​கியதை இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் பாராட்​டி​னார். உங்​களது தைரி​யம் நம்​ப​முடி​யாத வித​மாக இருக்​கிறது எனக் கூறி​னார். அப்​போது நான், இந்த தொடரில் நீங்​கள் சிறப்​பாக விளை​யாடினீர்​கள். உங்​களது அணி சிறப்​பாக செயல்​பட்​டது என கூறினேன்​’‘ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x