Published : 08 Aug 2025 06:33 AM
Last Updated : 08 Aug 2025 06:33 AM

உலக பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றது வேலம்மாள் வித்யாலயா

புதுடெல்லி: அமெரிக்காவின் விர்ஜீனியா நகரில் உலக பள்ளிகள் அணி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 8 சுற்றுகளை கொண்ட இந்த தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் போட்டியின் முடிவுகளை சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) வெளியிட்டுள்ளது. இதில், சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளி 8 சுற்றுகளிலும் வெற்றிபெற்று 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. கஜகஸ்தானின் தேசிய இயற்பியல் மற்றும் கணித பள்ளி வெள்ளிப் பதக்கம் வென்றது. அமெரிக்காவின் ஹார்கர் பள்ளி 3-வது இடம் பிடித்தது.

ஃபிபா கால்பந்து தரவரிசையில் இந்திய மகளிர் அணிக்கு 63-வது இடம்: மகளிர் கால்பந்து தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 7 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் இந்திய மகளிர் கால்பந்து அணி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றின் கடைசி ஆட்டத்தில் தாய்லாந்துடன் மோதியிருந்தது. இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றிருந்தது. இதன் மூலம் தரவரிசையில் இந்திய மகளிர் அணி முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு முன்னர் தரவரிசையில் அதிகபட்சமாக இந்திய மகளிர்அணி 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ல் 61-வது இடத்தில் இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x