Published : 08 Aug 2025 06:22 AM
Last Updated : 08 Aug 2025 06:22 AM

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வெற்றியுடன் தொடங்கினார் எரிகைசி

சென்னை: கு​வாண்ட்​பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று தொடங்​கியது.

இந்​தியா மற்​றும் உலகம் முழு​வ​தி​லுமிருந்து 19 சிறந்த கிராண்ட்​மாஸ்​டர்​கள் மற்​றும் ஒரு சர்​வ​தேச மாஸ்​டர் பங்​கேற்​றுள்ள இந்​தப் போட்​டி​யின் மொத்த பரிசுத்​தொகை ரூ.1 கோடி ஆகும். மேலும் இந்​தத் தொடர் மதிப்​புமிக்க ஃபிடே சர்க்​யூட் புள்​ளி​களை​யும் வழங்​கு​கிறது. இந்த புள்​ளி​கள் 2026 கேண்​டிடேட்ஸ் போட்​டிக்கு தகுதி பெறு​வதை தீர்​மானிப்​ப​தில் முக்​கிய பங்கு வகிக்​கிறது.

எம்​ஜிடி1 நிறு​வனத்​தால் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள சென்னைகிராண்ட் மாஸ்​டர்ஸ் போட்​டி, மாஸ்​டர்ஸ் மற்​றும் சேலஞ்​சர்ஸ் என இரண்டு பிரிவு​களில் நடை​பெறுகிறது. இரு பிரி​விலும் தலா 10 வீரர்​கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் ரவுண்ட்​-​ராபின் முறை​யில் நடத்​தப்​படு​கிறது.

போட்​டி​யின் தொடக்க நாளான நேற்று மாஸ்​டர்ஸ் பிரிவு முதல்சுற்​றில் சென்​னையைச் சேர்ந்த கிராண்ட்​மாஸ்​டர்​களான வி.பிரணவ், கார்த்​தி​கேயன் முரளி ஆகியோர் மோதினர். இந்த ஆட்​டம் 44-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. இதனால் இரு​வருக்​கும் தலா 0.5 புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டது.

இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜுன் எரி​கைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான அவோண்​டர் லியாங்​குடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய உலகின் 5-ம் நிலை வீரரான அர்​ஜுன் எரி​கைசி 49-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்று முழு​மை​யாக ஒரு புள்​ளியை பெற்​றார்.

நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி, அமெரிக்​கா​வின் ரே ராப்​சன் மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. வெள்ளை காய்​களு​டன் அனிஷ் கிரி விளை​யாடிய நிலை​யில் 59-வது நகர்த்​தலின் போது ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. இதனால் இரு​வருக்​கும் தலா 0.5 புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டது. மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரின், ஜெர்​மனி கிராண்ட் மாஸ்​ட​ரான வின்​சென்ட் கீமருடன் மோதி​னார். இதில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய நிஹால் சரின் 52-வது நகர்த்​தலின் போது தோல்வி அடைந்​தார்.

இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான விதித் குஜ​ராத்​தி, நெதர்​லாந்​தின் ஜோர்​டன் வான் பாரஸ்ட் மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. விதித் குஜ​ராத்தி வெள்ளை காய்​களு​ட​னும், ஜோர்​டன் வான் பாரஸ்ட் கருப்பு காய்​களு​ட​னும் களமிறங்​கி​னார்​கள். 48-வது நகர்த்​தலின் போது இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. சேலஞ்​சர்ஸ் பிரிவு முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான எம்​.பிரனேஷ், ஆர்​யன் சோப்ரா ஆகியோர் மோதினர். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய எம்​.பிரனேஷ் 26-வது நகர்த்​தலின் போதுவெற்றி பெற்​றார். இதனால் எம்​.பிரனேஷ் முழு​மை​யாக ஒரு புள்​ளியை பெற்​றார்.

அபிமன்யு புராணிக், அதிபன் பாஸ்​கரன் மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. அபிமன்யு புராணிக் வெள்ளை காய்​களு​ட​னும், அதிபன் பாஸ்​கரன் கருப்பு காய்​களு​ட​னும் களமிறங்​கினர். இந்த ஆட்​டம் 46-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதனால் இரு​வருக்​கும் தலா 0.5 புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டது. மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான லியோன் லூக் மென்​டோன்​கா, சர்​வ​தேச மாஸ்​ட​ரான ஜி.பி. ஹர்​ஷவர்​தனுடன் மோதி​னார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய லியோன் லூக் மென்​டோன்கா 47-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இதனால் அவர், முழு​மை​யாக ஒரு புள்​ளியை பெற்​றார்.

இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான ஆர்​.வைஷாலி - பா.இனியன் மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. இதில் வைஷாலி வெள்ளை காய்​களு​டன் மோதி​னார். இந்த ஆட்​டம் 57-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. இதனால் இரு​வருக்​கும் தலா 0.5 புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டது. முன்​னணி வீராங்​க​னை​யான இந்​தி​யா​வின் துரோணவல்லி ஹரிகா தனது முதல் சுற்​றில் தோல்வி அடைந்​தார்​. திப்​தாயன் கோஷுக்​கு எதி​ராக வெள்​ளை காய்​களு​டன்​ விளை​யாடிய ஹரி​கா 44-வது நகர்த்​தலின்​ போது தோல்​வி அடைந்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x