Published : 02 Aug 2025 06:43 AM
Last Updated : 02 Aug 2025 06:43 AM
லாடர்கில்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று லாடர்கில் பகுதியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சைம் அயூப் 57, ஃபகர் ஸமான் 28 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஜாண்சன் சார்லஸ் 35, ஜூவெல் ஆண்ட்ரூ 35, ஜேசன் ஹோல்டர் 30 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ் 3, சைம் அயூப் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: அரை இறுதியில் லக் ஷயா சென், தருண்
மக்காவ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக் ஷயா சென், தருண் மன்னேபள்ளி ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர். சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 47-ம் நிலை வீரரான இந்தியாவின் தருண் மன்னேபள்ளி 87-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹூ ஹியை 21-12, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன் னேறினார். மற்றொரு இந்திய வீரரான லக் ஷயா சென் 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜூவான் சென் ஹூவை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தார். இந்த ஆடடம் ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT