Published : 02 Aug 2025 06:39 AM
Last Updated : 02 Aug 2025 06:39 AM

இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி

லண்டன்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 224 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 8 விக்​கெட்​களை இழந்து 242 ரன்​கள் எடுத்து முன்​னிலை பெற்​றது.

லண்​டன் கெனிங்​டன் ஓவல் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த இந்​திய அணி மழை​யால் பாதிக்​கப்​பட்ட முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 64 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 204 ரன்​கள் எடுத்​தது. கருண் நாயர் 52, வாஷிங்​டன் சுந்​தர் 19 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இந்​திய அணி மேற்​கொண்டு 20 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் எஞ்​சிய 4 விக்​கெட்​களை​யும் தாரை வார்த்​தது. கருண் நாயர் 109 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் டங்​கின் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் வெளி​யேறி​னார். வாஷிங்​டன் சுந்​தர் 55 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​கள் எடுத்த நிலை​யில் கஸ் அட்​கின்​சன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை லெக் திசை​யில் தூக்கி அடித்த போது டீப் ஸ்கொயர் திசை​யில் ஜேமி ஓவர்​டனிடம் கேட்ச் ஆனது.

இவர்​களை தொடர்ந்து முகமது சிராஜ் 0, பிரசித் கிருஷ்ணா 0 ரன்​களில் கஸ் அட்​கின்​சன் பந்​தில் நடையை கட்ட இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 69.4 ஓவர்​களில் 224 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி 2-வது நாள் ஆட்​டத்​தில் 34 பந்​துகளை மட்​டுமே எதிர்​கொண்ட நிலை​யில் கடைசி 4 விக்​கெட்​களை​யும் பறி​கொடுத்​தது. இங்​கிலாந்து அணி தரப்​பில் கஸ் அட்​கின்​சன் 5, ஜோஷ் டங்க் 3 விக்​கெட்​களை​யும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்​கெட்​டை​யும் வீழ்த்​தினர்.

இதையடுத்து பேட்​டிங்கை தொடங்​கிய இங்​கிலாந்து அணிக்கு ஸாக் கிராவ்​லி, பென் டக்​கெட் ஜோடி பாஸ்​பால் முறை​யில் அதிரடி தொடக்​கம் கொடுத்​தனர். ஆகாஷ் தீப் வீசிய 4-வது ஓவரில் பென் டக்​கெட் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட்​டில் சிக்​ஸர் விளாசி மிரட்​டி​னார். தொடர்ந்து ஆகாஷ் தீப் வீசிய 6-வது ஓவரில் பென் டக்​கெட் 3 பவுண்​டரி​கள் அடித்​தார். முகமது சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் ரேம்ப் ஷாட்​டில் விக்​கெட் கீப்​பரின் பின்​புறம் சிக்​ஸர் விளாசி​னார்.

மறு​முனை​யில் ஸாக் கிராவ் ஓவருக்கு 2 பவுண்​டரி​களை விரட்டி இந்​திய அணி​யின் பந்து வீச்​சாளர்​களுக்கு அழுத்​தம் கொடுத்​தார். மட்​டையை சுழற்​றிய பென் டக்​கெட் 38 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஆகாஷ் தீப் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். ஆஃப் ஸ்டெம்​புக்கு வெளியே ஆகாஷ் தீப் வீசிய பந்தை பென் டக்​கெட் ஸ்கூப் ஷாட் விளை​யாட முயன்​றார். ஆனால் பந்து மட்​டை​யில் உரசி​யபடி விக்​கெட் கீப்​பர் துருவ் ஜூரெலிடம் கேட்ச் ஆனது. முதல் விக்​கெட்​டுக்கு பென் டக்​கெட், ஸாக் கிராவ்லி ஜோடி 12.5 ஓவர்​களில் 92 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து கேப்​டன் ஆலி போப் களமிங்​கி​னார். மட்​டையை சுழற்றிய ஸாக் கிராவ்லி 42 பந்​துகளில், 12 பவுண்​டரி​களு​டன் 19-வது அரை சதத்தை கடந்​தார். மதிய உணவு இடைவேளை​யில் இங்​கிலாந்து அணி 16 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 109 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஸாக் கிராவ்லி 52, ஆலி போப் 12 ரன்​கள் சேர்த்​திருந்​தனர். உணவு இடைவேளைக்கு பின்​னர் இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர்​கள் ஸ்டெம்​பு​களுக்கு குறி​வைத்​தும், சிறந்த நீளத்​தி​லும் பந்​துகளை தொடர்ச்​சி​யாக வீசி அழுத்​தம் கொடுத்​தனர்.

ஸாக் கிராவ்லி 57 பந்​துகளில், 14 பவுண்​டரி​களு​டன் 64 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் புல்​ஷாட் விளை​யாடிய போது மிட்விக்​கெட் திசை​யில் ஜடேஜா​விடம் கேட்ச் ஆனது. இதன் பின்​னர் இங்​கிலாந்து அணி சீரான இடைவேளை​யில் விக்​கெட்​களை இழந்​தது. ஆலி போப் 44 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 22 ரன்​களும், ஜோ ரூட் 45 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 29 ரன்​களும், ஜேக்​கப் பெத்​தேல் 6 ரன்​களும் எடுத்த நிலை​யில் முகமது சிராஜ் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தனர்.

விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ஜேமி ஸ்மித் 8 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பேக் ஆஃப்தி லெந்த்​தில் கூடு​தல் பவுன்​ஸுடன் வீசிய பந்தை ஸ்கொயர் டிரைவ் செய்ய முயன்​றார். ஆனால் பந்து மட்டை விளிம்​பில் பட்டு 2-வது சிலிப் திசை​யில் நின்ற கே.எல்​.​ராகுலிடம் கேட்ச் ஆனது. இதை தொடர்ந்து களமிறங்​கிய ஜேமி ஓவர்​டன் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். தேநீர் இடைவேளை​யில் இங்​கிலாந்து அணி 42.5 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 215 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஹாரி புரூக் 33 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார். தேநீர் இடைவேளைக்கு பின்​னர் ஹாரி புரூக்​குடன், கஸ் அட்​கின்​சன் இணைய இங்​கிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடியது. 46-வது ஓவரில் இங்​கிலாந்து அணி 224 ரன்​களை கடந்து முன்​னிலை பெறத் தொடங்​கியது.

கஸ் அட்​கின்​சன் 11 ரன்​களில் பிரசித் கிருஷ்ணா பந்தை ஷார்ட் பாலை தூக்கி அடிக்க முயன்ற போது மிட் ஆன் திசை​யில் நின்ற ஆகாஷ் தீப்​பிடம் கேட்ச் ஆனது. இதன் பின்​னர் ஜோஷ் டங்க் களமிறங்க ஹாரி புரூக் அதிரடி​யாக விளை​யாடி​னார். முகமது சிராஜ் வீசிய 47.2 ஓவரில் ஸ்வீப் ஷாட்​டில் சிக்​ஸர் விளாசி​னார். இங்​கிலாந்து அணி 48 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 242 ரன்​கள் எடுத்​திருந்​த நிலை​யில்​ மழை ​காரண​மாக ஆட்​டம்​ தடைபட்​டது. அப்​போது ஹாரி புரூக்​ 48 ரன்​களும்​, ஜோஷ் டங்​க்​ ரன்​ ஏதும்​ எடுக்​​காமலும்​ களத்​தில்​ இருந்​தனர்​. இந்​தி​ய அணி ​சார்​பில்​ பிரசித்​ கிருஷ்ணா 4, முகமது சி​ராஜ் 3 விக்​கெட்​களை வீழ்​த்​தி​இருந்​தனர்​.

கிறிஸ் வோக்ஸ் விலகல்: லண்டனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 57-வது ஓவரில் பீல்டிங் செய்தபோது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸூக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் கிறிஸ் வோக்ஸ் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x