Published : 01 Aug 2025 06:08 AM
Last Updated : 01 Aug 2025 06:08 AM

புரோ கபடி லீக் சீசன் 12: தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸுடன் தமிழ் தலைவாஸ் மோதல்

மும்பை: புரோ கபடி 12-வது சீசன் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் இம்முறை விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறுகின்றன.

புரோ கபடி லீக்கின் 2025-ம் ஆண்டு சீசனின் முதற்கட்ட போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 11 வரை விசகாப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு விசாகப்பட்டினத்துக்கு புரோ கபடி லீக் போட்டிகள் திரும்பி உள்ளன. இங்கு கடைசியாக 2018-ம் ஆண்டு 6-வது சீசன் போட்டிகள் நடைபெற்றன.

29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெறும் தொடக்க ஆட்​டத்​தில் தெலுகு டைட்​டன்ஸ் அணி தமிழ் தலை​வாஸை எதிர்​கொள்​கிறது. அன்​றைய தினம் நடை​பெறும் 2-வது ஆட்​டத்​தில் பெங்​களூரு புல்ஸ் அணி புனேரி பால்​டனை சந்​திக்​கிறது. 30-ம் தேதி தெலுகு டைட்​டன்ஸ் அணி, யுபி யோதாஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. அன்​றைய தினம் நடை​பெறும் 2-வது ஆட்​டத்​தில் யு மும்​பா, குஜ​ராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்​கொள்​கிறது.

அதேவேளை​யில் 31-ம் தேதி நடை​பெறும் ஆட்​டத்​தில் தமிழ்​தலை​வாஸ் அணி, யு மும்​பாவுடன் மல்​லுக்​கட்ட உள்​ளது. அன்​றைய தினம் நடை​பெறும் 2-வது ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஹரி​யாணா ஸ்டீலர்ஸ் அணி, பெங்​கால் வாரியர்ஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

இதைத் தொடர்ந்து 2-வது கட்ட போட்​டிகள் செப்​டம்​பர் 12-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெய்ப்​பூரில் உள்ள எஸ்​எம்​எஸ் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெறுகிறது. லீக்​கின் 3-வது கட்ட போட்டி தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் கீழ் உள்ள சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் செப்​டம்​பர் 29 முதல் அக்​டோபர் 11 வரை நடை​பெறுகிறது. அன்​றைய தினம் நடை​பெறும் முதல் ஆட்​டத்​தில் யுபி யோதாஸ், குஜ​ராத் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்​றன. 2-வது ஆட்​டத்​தில் தபாங் டெல்லி கே.சி., ஹரி​யாணா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்​கொள்​கிறது.

சொந்த மண்​ணில் தமிழ் தலை​வாஸ் அணி அக்​டோபர் 1-ல் யு மும்​பாவுடன் மோதுகிறது. தொடர்ந்து 3-ம் தேதி ஹரி​யாணா ஸ்டீலர்​ஸ், 5-ம் தேதி பெங்​களூரு புல்​ஸ், 7-ம் தேதி பாட்னா பைரேட்​ஸ், 11-ம் தேதி புனே பைரேட்ஸ் அணி​களு​டன் மோதுகிறது தமிழ் தலை​வாஸ் அணி. லீக்​கின் கடைசி கட்ட போட்​டிகள் அக்​டோபர் 13 முதல் 21 வரை டெல்​லி​யில் உள்​ள தி​யாக​ராஜ் விளை​யாட்​டு வளாகத்​தில்​ நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x