Published : 01 Aug 2025 05:51 AM
Last Updated : 01 Aug 2025 05:51 AM

மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: தருண், லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

மக்காவ்: மக்காவ் ஒபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் தருண் மன்னே பள்ளி, போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஹாங் காங்கின் லீ சியூக் யியு-வை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 47-ம் நிலை வீரரான இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, போட்டித் தரவரிசையில் முதலிடத்திலும், உலகத் தரவரிசையில் 15-வது இடத்திலும் உள்ள ஹாங் காங் கின் லீ சியூக் யியு-வை எதிர் கொண்டார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 23 வயதான தருண் 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் தரவரிசையில் 87-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹூ ஹி அன்னுடன் மோதுகிறார் தருண்.

காமன்​வெல்த் விளை​யாட்டு சாம்​பிய​னான இந்​தி​யா​வின் லக்‌ஷயா சென் 2-வது சுற்​றில் இந்​தோ​னேஷி​யா​வின் ஷிகோ ஆரா டுவி வார்​டோயோவுடன் மோதி​னார்.

இதில் லக்‌ஷயா சென் 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார். மற்​றொரு இந்திய வீர​ரான ஆயுஷ் ஷெட்டி 18-21, 16-21 என்ற செட் கணக்​கில் மலேசி​யா​வின் ஜஸ்​டின் ஹோவிடம் தோல்வி அடைந்​தார்.

கலப்பு இரட்​டையர் பிரி​வு: மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் ரக்‌ஷிதா ராம்​ராஜ் 21-14, 10-21, 11-21 என்ற செட் கணக்​கில் தாய்​லாந்​தின் புசானன் ஓங்​பம்​ருங்ஃ​பானிடம் வீழ்ந்​தார். இந்த ஆட்​டம் 51 நிமிடங்​கள் நடை​பெற்​றது. கலப்பு இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-19, 13-21, 18-21 என்ற செட் கணக்​கில் மலேசி​யா​வின் ஜிம்மி வாங்க், லாய் பெய்ஜிங் ஜோடி​யிடம் தோல்வி அடைந்​தது.

சாட்விக் - ஷிராக் ஜோடி: ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி ஜப்பானின் ககேரு குமாகாய், ஹிரோகி நிஷி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 10-21, 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x