Last Updated : 22 Jul, 2025 10:46 AM

 

Published : 22 Jul 2025 10:46 AM
Last Updated : 22 Jul 2025 10:46 AM

மான்செஸ்டரில் இந்திய அணி எப்படி? - ENG vs IND 4வது டெஸ்ட்

மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது இல்லை. இந்த சூழலில் இந்தியா அங்கு முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கி உள்ளது. இந்நிலையில்தான் 4-வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. லார்ட்ஸ் போட்டியில் வெறும் 22 ரன்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்திய அணி எப்படி? - மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் கடந்த 1936 முதல் இந்தியா விளையாடி வருகிறது. இந்த மைதானத்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4-ல் தோல்வி அடைந்துள்ளது இந்தியா. 5 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.

கடந்த 35 ஆண்டுகளில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் விளையாடி உள்ளது. கடந்த 2021 சுற்றுப்பயணத்தில் 5-வது போட்டி இந்த மைதானத்தில் நடைபெற இருந்தது. கரோனா பரவல் காரணம் அந்தப் போட்டியின் அட்டவணை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதானல் அந்த போட்டி 12 மாதங்களுக்கு பிறகு பர்மிங்காமில் நடைபெற்றது.

கடைசியாக கடந்த 2014-ல் தோனி தலைமையிலான இந்திய அணி இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த மைதானத்தில்தான் தோனி கடைசியாக தனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவர் ஓய்வு பெற்றார். 2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை நியூஸிலாந்து அணி இங்குதான் வீழ்த்தியது. தோனிக்கு அதுதான் கடைசி சர்வதேச போட்டி.

சச்சினின் முதல் சதம்: கடந்த 1990-ல் இந்த மைதானத்தில்தான் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். தனது அபார ஆட்டத்தின் மூலம் அந்தப் போட்டியை சச்சின் டிரா செய்திருந்தார்.

இந்தியாவுக்கு கிடைக்குமா முதல் வெற்றி? - இந்த தொடரில் கடந்த 2-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அந்த மைதானத்தில் 8 போட்டிகளில் விளையாடி 7 தோல்வி, ஒரு ஆட்டத்தை டிரா செய்திருந்தது இந்தியா. இந்த சூழலில் அந்தப் போட்டியில் 336 ரன்களில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியது. அதே பாணியில் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்திலும் இந்தியா வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x