Published : 22 Jul 2025 06:37 AM
Last Updated : 22 Jul 2025 06:37 AM

அர்ஜுன் எரிகைசிக்கு 6-வது இடம்

லாஸ் வேகாஸ்: ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்​கா​வின் லாஸ் வேகாஸ் நகரில் நடை​பெற்​றது. இதன் இறு​திப் போட்​டி​யில் அமெரிக்​கா​வின் லெவன் அரோனியன் 1.5-0.5 என்ற கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த ஹான்ஸ் மோக் நீமனை தோற்​கடித்து முதலிடம் பிடித்​தார்.

3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் உலகின் முதல் நிலை வீர​ரான நார்​வே​யின் மேக்​னஸ் கார்ல்​சன் 1.5-0.5 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் ஹிகாரு நகமு​ராவை தோற்​கடித்​தார். இந்​தி​யா​வின் அர்​ஜுன் எரி​கைசி 0-2 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் ஃபேபி​யானோ கரு​னா​விடம் தோல்வி அடைந்து 6-வது இடத்தை பிடித்​தார். அதேவேளை​யில் மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா 1.5-0.5 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் சோ வெஸ்​லியை வீழ்த்தி 7-வது இடம் பிடித்​தார். முதலிடம் பிடித்த லெவன் அரோனியன் இந்​திய மதிப்​பில் ரூ.1.72 கோடியை பரி​சாக பெற்​றார். அர்​ஜுன் எரி​கைசிக்கு ரூ.34.50 லட்​ச​மும், பிரக்​ஞானந்​தாவுக்கு ரூ.25.88 லட்​ச​மும் வழங்​கப்​பட்​டது.

பாட்மிண்டன் கால் இறுதியில் இந்தியா தோல்வி: இந்​தோ​னேஷி​யா​வின் சோலோ நகரில் ஆசிய ஜூனியர் பாட்​மிண்​டன் கலப்பு அணி​கள் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதன் கால் இறுதி சுற்​றில் இந்​திய அணி நேற்று முன்​னாள் சாம்​பிய​னான ஜப்​பானை எதிர்த்து விளை​யாடியது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி கடுமை​யாக போராடி 104-110 என்ற புள்​ளி​கள் கணக்​கில் தோல்வி அடைந்​தது. ஆட்​டத்​தின் பெரும்​பாலான நேரம் இந்​திய அணி முன்​னிலை​யில் இருந்​தது. ஆனால் கடைசி 5 ஆட்​டங்​களில் தொடர்ச்​சி​யாக வெற்றி பெற்று ஜப்​பான் அணி அசத்​தி​யது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x