Published : 22 Jul 2025 06:18 AM
Last Updated : 22 Jul 2025 06:18 AM

மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ்: பாலமுருகன், யாஷினி சாம்பியன்

சென்னை: 4-வது மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் தொடர் சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வந்​தது. இதன் ஆடவர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் பால​முரு​கன் (ஐடிடிசி) 8-11, 14-12, 11-6, 8-11, 11-3, 10-12, 11-8 என்ற செட் கணக்​கில் கார்த்​திக்​கேயனையும் (எஸ்கேஅகாட​மி), மகளிர் பிரி​வில் யாஷினி (எஸ்கே அகாட​மி) 11-9, 12-14, 11-9, 11-6, 11-2 என்ற செட் கணக்​கில் அம்​ரு​தாபுஷ்பக்கையும் (ஆர்பிஐ)தோற்​கடித்து பட்​டம் வென்​றனர். யு-17 சிறு​வர் பிரி​வில் நிகில்மேனன் 4-வது முறை​யாக சாம்​பியன் பட்​டத்தை கைப்​பற்​றி​னார்.

யு-19 சிறு​வர் பிரி​வில் பி.பி.அபிநந்த் (சென்னை அச்​சீவர்​ஸ்), யு-15 பிரி​வில் ஆகாஷ் ராஜவேலு (சிடிடிஎஃப்), யு-13 பிரி​வில் எம்​.அஷ்வஜித் (எஸ்கே அகாட​மி), யு-11 பிரி​வில் சித்​தார்த் ஆதித்​யன் (எஸ்​எஸ்​ஹெச்ஐ) ஆகியோர் வெற்றி பெற்​றனர். யு-19 சிறுமியர் பிரி​வில் அனன்யா (சென்னை அச்​சீவர்​ஸ்), யு-17 பிரி​வில் அனன்யா (சென்னை அச்​சீவர்​ஸ்), யு-15 பிரி​வில் பவித்ரா (நெய்​வேலி), யு-13 பிரி​வில் அம்​பதி பூஜா (நெய்​வேலி), யு-11 பிரி​வில் பிர​திகா (எஸ்​எஸ்ஏ, ஈரோடு) ஆகியோர் வெற்றி பெற்​றனர். வெற்றி பெற்​றவர்​களுக்கு ரூ.4.25 லட்​சம் பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x