Published : 22 Jul 2025 06:14 AM
Last Updated : 22 Jul 2025 06:14 AM

ஆக.1-ல் சென்னையில் கிரிக்​கெட் வீரர்கள் தேர்வு

சென்னை: தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் 2025 – 2026-ம் ஆண்​டுக்​கான 16 வயதுக்​குட்​பட்​டோருக்​கான வீரர்​கள் தேர்வை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் ‘பி’ கிர​வுண்​டில் நடத்த உள்​ளது. இதில் கலந்து கொள்ள விரும்​புவர்​கள் 2009-ம் ஆண்டு செப்​டம்​பர் 1 அல்​லது அதற்கு பிறகு மற்​றும் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று அல்​லது அதற்கு முன் பிறந்​தவர்​களாக இருக்க வேண்​டும்.

இந்த தகு​தி​யுடைய​வர்​கள் தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கத்​தின் இணை​யதள பக்​கத்​துக்கு சென்று அங்கு கொடுக்​கப்​பட்​டுள்ள லிங்க்​கில் தேவை​யான விவரங்​களை பதிவு செய்ய வேண்​டும். இன்று காலை 10 மணி முதல் வரும் 28-ம் தேதிமாலை 6 மணி வரை பதிவு செய்​ய​லாம். ஆவணங்​கள் சரி​பார்க்​கப்​பட்ட பின்​னர் இ-மெயி​லில் வீரர்​களுக்கு தகவல் தெரிவிக்​கப்​படும். அவர்​கள் குறிப்​பிட்​டுள்ள தேதி​யில் தேர்​வில் கலந்​து​கொள்​ளலாம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x