Published : 22 Jul 2025 06:11 AM
Last Updated : 22 Jul 2025 06:11 AM

காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து நித்திஷ் குமார் ரெட்டி விலகல்

மான்செஸ்டர்: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான நித்​திஷ் குமார் ரெட்டி முழங்​கால் காயம் காரண​மாக இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்​ளார்.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் இந்​திய அணி 1-2 என பின்​தங்கி உள்​ளது. 4-வது டெஸ்ட் போட்டி நாளை (23-ம் தேதி) மான்​செஸ்​டர் நகரில் தொடங்க உள்​ளது. இந்​நிலை​யில் இந்​திய அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான நித்​திஷ் குமார் ரெட்டி நேற்று முன்தினம் உடற் பயிற்சி செய்து கொண்​டிருந்த போது காயம் அடைந்​தார். இதைத் தொடர்ந்து அவர், எஞ்​சி​யுள்ள 2 டெஸ்ட் போட்​டிகளில் இருந்​தும் வில​கி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக பிசிசிஐ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “இடது முழங்​கால் காயம் காரண​மாக மீத​முள்ள 2 டெஸ்ட் போட்​டிகளில்இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகிஉள்​ளார். அவர், உடனடி​யாகதாயகம் திரும்​பு​வார்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x