Published : 21 Jul 2025 06:15 AM
Last Updated : 21 Jul 2025 06:15 AM

லெஜண்ட்ஸ் கிரிக்கெட்​ இந்திய வீரர்கள் வில​கல்: பாகிஸ்தானுடனான போட்டி ரத்து

லண்​டன்: 2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்​கெட் தொடரிலிருந்து இந்​திய வீரர்​கள் வில​கிய​தால் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் இடையே நடை​பெற​இருந்த போட்டி ரத்​தானது.

ஓய்வு பெற்ற கிரிக்​கெட் வீரர்​கள் பங்​கேற்​கும் 2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் தொடர் இங்​கிலாந்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்​கா, ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, பாகிஸ்​தான், மேற்கு இந்​தி​யத் தீவு, தென் ஆப்​பிரிக்கா ஆகிய 6 அணி​கள் பங்​கேற்​றுள்​ளன.
இந்​திய அணிக்கு யுவ​ராஜ் சிங் கேப்​ட​னாக பொறுப்​பேற்​றுள்​ளார். இந்​திய மூத்த வீரர்​கள் அணி​யில் ஷிகர் தவான், ஹர்​பஜன் சிங், சுரேஷ் ரெய்​னா, இர்​பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்​தப்​பா, அம்​பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.

இந்த தொடரில் இந்​தி​யா-​பாகிஸ்​தான் அணி​கள் மோதும் ஆட்​டம் நேற்று நடை​பெறு​வ​தாக இருந்​தது. இதனிடையே இந்த போட்​டி​யில் இருந்து ஷிகர் தவான், இர்​பான் பதான், யூசுப் பதான், ஹர்​பஜன் சிங் உள்​ளிட்ட சில வீரர்​கள் வில​கினர். ஜம்​மு-​காஷ்மீரின் பஹல்​காமில் நடந்த தீவிர​வாத தாக்​குதலுக்கு பாகிஸ்​தானே காரணம் என்று குற்​றம்​சாட்டி அவர்​கள் விளை​யாட மறுத்து விட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதனால் இந்த ஆட்​டம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தப் போட்​டிக்கு டிக்​கெட் வாங்​கிய​வர்​களுக்​கான கட்​ட​ணம் திருப்​பி அளிக்​கப்​படும்​ என்​று போட்​டி நிர்​​வாகம்​ ​சார்​பில்​ அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x