Published : 19 Jul 2025 05:52 AM
Last Updated : 19 Jul 2025 05:52 AM

ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ்: அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி அர்ஜுன் எரிகைசி சாதனை

லாஸ் வேகாஸ்: ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜுன் எரி​கைசி அரை இறு​திக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் ஆர்​.பிரக்​ஞானந்தா பட்​டம் வெல்​வதற்​கான வேட்​கை​யில் இருந்து வெளி​யேறி​னார்.

ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்​கா​வின் லாஸ் வேகாஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் கால் இறுதி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​​ஜுன் எரி​கைசி, உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசத்​தோரோவுடன் மோதி​னார். முதல் ஆட்​டத்​தில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய அர்​​ஜுன் எரி​கைசி 64-வது நகர்த்​தலின் போது டிரா செய்​தார்.

2-வது ஆட்​டத்​தில் வெள்ளை காய்​களு​டன் களமிறங்​கிய அர்​​ஜுன் எரி​கைசி 69-வது நகர்த்​தலின் போது வெற்​றியை வசப்​படுத்​தி​னார். முடி​வில் அர்​ஜுன் எரி​கைசி 1.5-0.5 என்ற கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். இதன் மூலம் ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரில் அரை இறு​திக்கு முன்​னேறிய முதல் இந்​திய வீரர் என்ற வரலாற்று சாதனையை​யும் அர்​​ஜுன் எரி​கைசி படைத்​துள்​ளார்.

அதேவேளை​யில் மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா 3-4 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் ஃபேபி​யானோ கரு​னா​விடம் தோல்வி அடைந்​தார். இந்த தோல்​வி​யால் பட்​டம் வெல்​வதற்​கான வேட்​கை​யில் இருந்து பிரக்​ஞானந்தா வெளி​யேறி​னார். மற்ற கால் இறுதி ஆட்​டங்​களில் அமெரிக்​கா​வின் லெவன் அரோனியன், ஹான்ஸ் மோக் நீமன் ஆகியோர் வெற்றி பெற்​றனர்.

லெவன் அரோனியன் 2.5-1.5 என்ற கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த ஹிகாரு நகமு​ராவை​யும், ஹான்ஸ் மோக் நீமன் 4-2 என்ற கணக்​கில் உஸ்​பெகிஸ்​தானின் ஜாவோகிர் சிந்​தரோவை​யும் தோற்​கடித்​தனர். அரை சுற்​றில் அர்​​ஜுன் எரி​கைசி, லெவன் அரோனியனுடன் மோதுகிறார். மற்​றொரு அரை இறு​தி​யில் ஹான்​ஸ் மோக் நீமன், ஃபேபி​யானோ கரு​னாவை சந்​திக்​கிறார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x