Published : 14 Jul 2025 08:18 AM
Last Updated : 14 Jul 2025 08:18 AM

எம்சிசி முருகப்பா ஹாக்கி: இந்திய கடற்படை அணி வெற்றி

சென்னை: எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது.

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் ஹாக்கி கர்நாடகாவைச் சாய்த்தது. கடற்படை அணியின் சுஷில் தன்வார் 3 கோல்களையும் (3, 20, 34-வது நிமிடங்கள்), பிரசாந்த் ஒரு கோலையும் அடித்தனர். கர்நாடகா அணி தரப்பில் பாரத் மகாலிங்கப்பா (12-வது நிமிடம்), விஷ்வாஸ் (35-வது நிமிடம்) தலா ஒரு கோலடித்தனர்.

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு (எச்யுடி), போபால் சாய் (என்சிஇ) அணி​கள் மோதிய ஆட்​டம் 4-4 என்ற கோல்​கள் கணக்​கில் டிரா​வில் முடிந்​தது. எச்​யுடி அணிக்​காக பட்​ராஸ் டிர்க்​கி(3-வது நிமிடம்) ஒரு கோலும், சோமண்ணா 2 கோலும்​(15, 41-வது நிமிடம்), பாலச்​சந்​தர் ஒரு கோலும்​(44-வது நிமிடம்) அடித்​தனர். என்​சிஇ அணிக்​காக முகமது ஜைத் கான்​(20-வது நிமிடம்), மன்​ஜீத் (26-வது நிமிடம்), மணீஷ் சஹானி (29-வது நிமிடம்​), அமித்​ ​யாதவ்​(47-வது நிமிடம்​) ஆகியோர்​ தலா ஒரு கோல் அடித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x