Published : 14 Jul 2025 08:12 AM
Last Updated : 14 Jul 2025 08:12 AM

வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி - PPL

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், காரைக்கால் நைட்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.

புதுச்சேரி சீகெம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் முதலில் விளையாடிய ஜெனித் யானம் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. வேதாந்த் பரத்வாஜ் 104, ஆதித்யா கர்வால் 76, பரமேஷ்வரன் சிவராமன் 28 ரன்கள் எடுத்தனர்

பின்​னர் 215 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் களமிறங்​கிய காரைக்​கால் அணி, 18.1 ஓவர்​களில் அனைத்து விக்​கெட்​களை​யும் இழந்து 161 ரன்​கள் மட்​டுமே எடுத்து தோல்வி கண்​டது. யானம் ராயல்ஸ் அணி​யின் பந்​து​வீச்​சாளர் சந்​தீப் பாஸ்​வான் 4, கண்​ணன் விக்​னேஷ் 3 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 104 ரன்​கள் குவித்த வேதாந்த் பரத்​வாஜ் ஆட்​ட​நாயகன் விருது பெற்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x