Published : 13 Jul 2025 09:03 AM
Last Updated : 13 Jul 2025 09:03 AM

பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் வெற்றி!

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அங்குள்ள சீகெம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் - காரைக்கால் நைட்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ரூபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆனந்த் பயஸ் 60 லோகேஷ் பிரபாகரன் 37 ரன்கள் சேர்த்தனர்.

173 ரன்கள் இலக்குடன் விளையாடிய காரைக்கால் அணி 19.3 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அங்கித் சர்மா 34 பந்துகளில், 57 ரன்களும் முஹமது ஜவாத் 38 பந்துகளில் 55 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x