Published : 12 Jul 2025 07:54 AM
Last Updated : 12 Jul 2025 07:54 AM
சென்னை: எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - இந்திய ராணுவ அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு அணி தரப்பில் பாலசந்தர் 34 மற்றும் 59-வது நிமிடங்களில் பீல்டு கோல் அடித்து அசத்தினார். சதீஷ் (14-வது நிமிடம்), பட்ராஸ் திர்கே (32-வது நிமிடம்), மனோஷ் குமார் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மற்ற ஆட்டங்களில் என்சிஒஇ (போபால்) 4-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிராவையும், ஐஓசி 2-0 என்ற கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரியம் அணியையும் தோற்கடித்தன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் ரயில்வே - இந்திய ராணுவம், கர்நாடகா - ஐஓசி, மலேசிய ஜூனியர் நேஷனல் - இந்திய கடற்படை அணிகள் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT