Published : 10 Jul 2025 06:44 AM
Last Updated : 10 Jul 2025 06:44 AM

இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்று மோதல்

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் லீட்ஸில் நடை பெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறைக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் வேட்டையாடிய ஷுப்மன் கில், 2-வது இன்னிங்ஸில் 161 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார்.

ஒட்​டுமொத்​த​மாக 4 இன்​னிங்​ஸ்​களில் 585 ரன்​கள் வேட்​டை​யாடி உள்ள ஷுப்​மன் கில்​லிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். தொடக்க வீரர்​களான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல், ரிஷப் பந்த் ஆகியோ​ரும் சிறந்த பார்​மில் உள்​ளனர். கருண் நாயர் மட்​டுமே இது​வரை அரை சதத்தை கூட எட்ட முடி​யாமல் தடு​மாறி வரு​கிறார். அவரும் பார்​முக்கு திரும்​பும் பட்​சத்​தில் அணி​யின் பேட்​டிங் மேலும் வலுப்​பெறும்.

எட்​ஜ்​பாஸ்​டன் போட்​டி​யில் ஆல்​ர​வுண்​டர்​களாக ரவீந்​திர ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் சிறந்த பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தனர். நித்​திஷ் குமார் ரெட்டி மட்​டுமே ஏமாற்​றம் அளித்​திருந்​தார். வேகப்​பந்து வீச்சை பொறுத்​தவரை​யில் ஆகாஷ் தீப் இரு இன்​னிங்​ஸிலும் கூட்​டாக 10 விக்​கெட்​களை வீழ்த்தி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார். அதேவேளை​யில் முகமது சிராஜ் முதல் இன்​னிங்​ஸில் கைப்​பற்​றிய 6 விக்​கெட்​களும் முக்​கி​யத்​து​வம் பெற்​றிருந்​தது.

2-வது டெஸ்ட் போட்​டி​யில் ஓய்வு கொடுக்​கப்​பட்​டிருந்த ஜஸ்​பிரீத் பும்​ரா, லார்ட்ஸ் போட்​டி​யில் களமிறங்​கு​கிறார். இதனால் பிரசித் கிருஷ்ணா நீக்​கப்​படு​வார். பந்து வீச்​சில் பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​தாத அவர், இரு போட்​டிகளி​லும் கூட்​டாக 6 விக்​கெட்​கள் மட்​டுமே கைப்​பற்​றி​யிருந்​தார். பும்ரா களமிறங்​கு​வதன் மூலம் இந்​திய அணி​யின் பந்​து​வீச்சு துறை மேலும் வலு​வடையக்​கூடும். முகமது சிராஜ், கடந்த 2021-ல் லார்ட்ஸ் மைதானத்​தில் நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் இரு இன்​னிங்​ஸிலும் தலா 4 விக்​கெட் கைப்​பற்றி அசத்​தி​யிருந்​தார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பந்து வீச்சு வெளிப்​படக்​கூடும்.

பென் ஸ்டோக்ஸ் தலை​மையி​லான இங்​கிலாந்து அணி தட்​டை​யான ஆடு​களங்​களில் அதிக ரன்​கள் வேட்​டை​யாடி எதிரணிக்கு அழுத்​தம் கொடுக்​கும் பாணி​யில் முதன்​முறை​யாக எட்​ஜ்​பாஸ்​டன் போட்​டி​யில் பின்​னடைவை சந்​தித்து இருந்​தது. தொடக்க வீர​ரான ஸாக் கிராவ்​லி​யிடம் இருந்து கடந்த போட்​டி​யில் பெரிய அளவி​லான பங்​களிப்பு வெளிப்​பட​வில்​லை. மேலும் பென் ஸ்டோக்​ஸும் மட்டை வீச்​சில் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​த​வில்​லை. இதே​போன்று ஜோ ரூட்​டும் நிலை​யான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தத் தவறி​னார்.

அதேவேளை​யில் எட்​ஜ்​பாஸ்​டனில் முதல் இன்​னிங்​ஸில் சதம் விளாசிய ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் ஆகியோரிடம் இருந்து மீண்​டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். பந்து வீச்சை பலப்​படுத்​தும் வித​மாக ஜோப்ரோ ஆர்ச்​சர் விளை​யாடும் லெவனில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இதனால் ஜோஷ் டங்க் நீக்​கப்​பட்​டுள்​ளார். ஜோப்ரா ஆர்ச்​சர், இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசைக்​கு அழுத்​தம்​ கொடுக்​கக்​கூடும்​ என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

4.5 வருடங்களுக்கு பிறகு.. இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். முழங்கை மற்றும் முதுகுவலி காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர், நான்கரை ஆண்டுகளாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. கடைசியாக அவர், கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.

கடந்த மாதம் முதல்தர கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சர் 18 ஓவர்களை வீசி உடற்தகுதியை நிரூபித்ததை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு திரும்பி உள்ளார். இதே மைதானத்தில்தான் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுகமாகியிருந்தார்.

அப்போது அந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 2 சதங்கள் விளாசி, இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். எனினும் லார்ட்ஸ் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் தனது பவுன்ஸர்களால், ஸ்டீவ் ஸ்மித்தை திணறடித்தார். இதே போன்ற சூழ்நிலையில்தான் தற்போது அவர், அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இம்முறை இந்திய அணியின் நட்சத்திரமான ஷுப்மன் கில் 2 போட்டிகளிலேயே 500 ரன்களுக்கு மேல் வேட்டையாடி உள்ளார். இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஷுப்மன் கில் கடும் சவால் அளித்தார். இதனால் ஷுப்மன் கில், ஜோப்ரா ஆர்ச்சர் இடையிலான மோதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், அபிமன்யு ஈஸ்வரன், நித்திஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்து லெவன்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.

நேரம்: பிற்பகல் 3.30, நேரலை: சோனி ஸ்போர்ட்ஸ், ஜியோஹாட் ஸ்டார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x