Published : 30 Jun 2025 07:47 AM
Last Updated : 30 Jun 2025 07:47 AM

இன்று முதல் மாநில சீனியர் வாலிபால்!

கோப்புப்படம்

சென்னை: சென்னையில் இன்று முதல்(ஜூன் 30) ஜூலை 6-ம் தேதி வரை 71-வது மாநில அளவிலான ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் போட்டி நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் ஆதரவுடன் இந்தப் போட்டியை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் ஜவஹர்லால் நேரு மைதானத்திலும், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்திலும் நடத்தவுள்ளது.

ஆடவர் பிரி​வில் 24 அணி​களும், மகளிர் பிரி​வில் 38 அணி​களும் பங்​கேற்​க​வுள்​ளன. லீக் மற்​றும் நாக்​-அவுட் முறை​யில் போட்​டிகள் நடை​பெறும்.

போட்டி தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு எழும்​பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்​தில் நடை​பெறும். போட்​டிக்கு எஸ்​என்ஜே குரூப்​ஸ், ஜாஸ் பெர்ப்​யூம்​ஸ், டிவோ​சா, ரேடியன்ஸ் ரியால்​டி, காவேரி டிஎம்டி பார்ஸ் அன்ட் ஸ்டிரக்ச்​சுரல், பிவெல் ஹாஸ்​பிட்​டல்​ஸ், காஸ்கோ இந்​தியா ஆகிய நிறு​வனங்​கள் ஸ்பான்​சர் செய்​கின்​றன.

சாம்​பியன் பட்​டம் பெறும் ஆடவர், மகளிர் அணி​களுக்கு எஸ்​என்ஜே கோப்பை வழங்​கப்​படும். ஆடவர் பிரி​வில் 2-ம் இடம்​பெறும் அணிக்கு டிவோசா கோப்​பை​யும், மகளிர் பிரி​வில் 2-ம் இடம் பெறும் அணிக்கு ரேடியன்ஸ் ரியால்டி கோப்​பை​யும் வழங்​கப்​படும். மகளிர் பிரி​வில் 3-ம் இடம் பெறும் அணிக்கு காவேரி டிஎம்டி பார்ஸ் கோப்​பை​யும், மகளிர் பிரி​வில் 3-ம் இடம் பெறும் அணிக்கு ஜாஸ் கோப்​பை​யும் வழங்​கப்​படும்.

சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் இத்​தகவல்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x