Published : 28 Jun 2025 08:46 AM
Last Updated : 28 Jun 2025 08:46 AM

நெல்லை ராயல்ஸ் கிங்ஸை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ்!

திருநெல்​வேலி: டிஎன்​பிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் திண்​டுக்​கல் டிராகன்ஸ் அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

திருநெல்​வேலி இந்​தியா சிமெண்ட் கம்​பெனி மைதானத்​தில் நேற்று முன்​தினம் இரவு இந்த ஆட்​டம் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய நெல்லை அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 179 ரன்​கள் எடுத்​தது. டி. சந்​தோஷ் கு​மார் 26, அருண் கார்த்​திக் 5, அதிஷ் 19, நிர்​மல் குமார் 16, ரித்​திக் ஈஸ்​வன் 0, சோனு யாதவ் 29, அட்​னன் கான் 22, என்​.எஸ்​.ஹரீஷ் 43 ரன்​கள் எடுத்​தனர். திண்​டுக்​கல் அணி சார்​பில் அஸ்​வின், வருண் சக்​ர​வர்த்​தி, ஜி.பெரிய​சாமி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை சாய்த்​தனர்.

பின்​னர் 180 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய திண்​டுக்​கல் அணி 18.4 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 180 ரன்​கள் சேர்த்து வெற்றி கண்​டது. அந்த அணி​யின் விமல் குமார் அதிரடி​யாக விளை​யாடி 31 பந்​துகளில் 45 ரன்​கள் குவித்​தார். ஹுன்னி சைனி 14 பந்​துகளில் 37 ரன்​களை விளாசி​னார். இதில் 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​கள் அடங்​கும்.

ரவிச்​சந்​திரன் அஸ்​வின் 5, ஷிவம் சிங் 2, பாபா இந்​திரஜித் 15, மான் பாப்னா 38, எச்​.​தினேஷ் 17, எம்​.​கார்த்​திக் சரண் 11 ரன்​கள் சேர்த்து அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். அதிரடி​யாக விளை​யாடிய ஹுன்​னி சைனி ஆட்​ட​நாயக​னாக தேர்​வு செய்​யப்​பட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x