Last Updated : 26 Jun, 2025 06:23 AM

2  

Published : 26 Jun 2025 06:23 AM
Last Updated : 26 Jun 2025 06:23 AM

இந்திய அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாதது ஏன்? - முதல் டெஸ்ட் முழு அலசல்

இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக லீட்ஸ் நகரில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. 371 ரன்​கள் இலக்கை துரத்​திய இங்​கிலாந்து அணி எந்​த​வித நெருக்​கடி​யும் இல்​லாமல் எளி​தாக இலக்கை விரட்டி வெற்றி கண்​டது.

இந்​திய அணி​யின் முன்​னணி பேட்​ஸ்​மேன்​கள் அனை​வரும் சிறந்த பங்​களிப்பை வழங்​கினர். ரிஷப் பந்த் இரண்டு ஆக்​கப்​பூர்​வ​மான சதங்​களை அடித்​தார். தொடக்க வீரர்​கள் (யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல்) ஒவ்​வொரு இன்​னிங்​ஸிலும் சிறந்த சதத்தை அடித்​தனர். கேப்​ட​னாக கில்​லும் தனது பங்​குக்கு ஒரு சதத்தை விளாசி​னார்.

பந்து வீச்​சில் பும்ரா முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​களை வேட்​டை​யாடி​னார். ஆனாலும் இந்​திய அணி தோல்​வியை சந்​தித்து 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்​தங்​கி​யுள்​ளது. தோற்க முடி​யாத டெஸ்​டில் இந்​திய அணி தேடிச் சென்று தோல்வி அடைந்​தது போன்று லீட்ஸ் போட்டி அமைந்​து​விட்​டது.

தாக்​கத்தை ஏற்​படுத்​தாத நடு​வரிசை பேட்​டிங் மற்​றும் எந்​த​வித பொறுப்​பும் இல்​லாமல் செயல்​பட்ட பின்​வரிசை பேட்​டிங், பீல்​டிங்​கில் ஏறக்​குறைய ஒரு டஜன் கேட்ச்​களை தவற​விட்​டது, டிஆர்​எஸ் எடுப்​ப​தில் செய்த தவறுகள், கேப்​ட​னாக ஷுப்​மன் கில் முக்​கிய​மான கட்​டங்​களில்
செய்த பிழைகள் என இந்​திய அணி​யின் தோல்விக்கு அடுக்​கான காரணங்​கள் அணிவகுக்​கின்​றன.

இரு இன்​னிங்​ஸிலும் இந்​திய அணி​யின் பின்​வரிசை பேட்​டிங் வெறுமை​யாக இருந்​தது. கடைசி 4 இடங்​களில் களமிறங்​கிய வீரர்​கள் இரு இன்​னிங்​ஸிலும் கூட்​டாக சேர்த்​தது வெறும் 9 ரன்​களே. முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி​யின் கடைசி 7 விக்​கெட்​கள் 41 ரன்​களுக்​கும், 2-வது இன்​னிங்​ஸில் கடைசி 6 விக்​கெட்​கள் 31 ரன்​களுக்​கும் கொத்து கொத்​தாக தாரை வார்க்​கப்​பட்​டன. நடு​வரிசை​யில் கருண் நாயர் இரு இன்​னிங்​ஸிலும் முறையே 0, 20 ரன்​களும், ரவீந்​திர ஜடேஜா 11, 25 ரன்​களே எடுத்​தனர். ஆல்​ர​வுண்​டர் என்ற அடிப்​படை​யில் விளை​யாடும் லெவனில் முன்​னுரிமை கொடுக்​கப்​பட்ட ஷர்​துல் தாக்​குர் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்​னுக்​கும், 2-வது இன்​னிங்​ஸில் 4 ரன்​களுக்​கும் நடையை கட்​டி​னார்.

இது ஒரு​புறம் இருக்க ‘கேட்ச்​சஸ் வின் தி மேட்​சஸ்’ என்ற தாரகமந்​திரத்தை இந்​திய வீரர்​கள் கேலிக்​கூத்​தாக்​கினர். முதல் இன்​னிங்​ஸில் 5 கேட்ச்​கள், 2-வது இன்​னிங்​ஸில் 2 கேட்ச்​களை தவற​விட்​டனர். இது​போக ரிஷப் பந்த், மட்டை விளிம்​பில் பட்ட பந்​துகள் சென்ற திசை தெரி​யாமல் ஒரு சில கேட்ச் வாய்ப்​பு​களை கைப்​பற்ற தவறி​னார். கடந்த 20 ஆண்​டு​களில் இங்​கிலாந்​தில் நடந்த டெஸ்​டில் எந்த அணி​யும் இந்த அளவுக்கு கேட்ச்​களை தவற​விட்​டது இல்லை என்ற மோச​மான சாதனையை​யும் படைத்​துள்​ளது இந்​திய அணி.

அடுத்​தடுத்து பந்து வீச்​சில் ஷர்​துல் தாக்​குர், ரவீந்​திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. 371 ரன்​கள் இலக்கை இங்​கிலாந்து அணி துரத்​திய நிலை​யில் ஜடேஜா​வின் பந்​துகளில் பென் டக்​கெட் சரள​மாக ரீவர்ஸ் ஸ்வீப் ஷாட்​களில் பவுண்​டரி​கள் அடித்​தார். முதல் இன்​னிங்​ஸில் ஜடேஜா 23 ஓவர்​களை வீசி 68 ரன்​களை விட்​டுக்​கொடுத்து விக்​கெட் ஏதும் கைப்​பற்​ற​வில்​லை. 2-வது இன்​னிங்​ஸில் 104 ரன்​களை தாரை வார்த்த நிலை​யில் ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார்.

ஷர்​துல் தாக்​குதர் முதல் இன்​னிங்​ஸில் 6 ஓவர்​களில் 38 ரன்​களை வழங்​கி​னார். 2-வது இன்​னிங்​ஸில் 10 ஓவர்​களில் 51 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட் கைப்​பற்​றி​னார். ஒட்​டுமொத்​த​மாக இரு இன்​னிங்​ஸிலும் இவர்​கள் இரு​வருமே ஆல்​ர​வுண்​டர்​களாக தங்​களது உயரிய பங்​களிப்பை வழங்க தவறினர். பிரசித் கிருஷ்ணா இரு இன்​னிங்​ஸை​யும் சேர்த்து 5 விக்​கெட்​கள் கைப்​பற்​றிய போதி​லும் இங்​கிலாந்து பேட்​டிங் வரிசைக்கு அவரால் பெரிய அழுத்​தம் கொடுக்க முடி​யாமல் போனது.

முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 5 கேட்ச்​களை தவற​வி​டா​மல் இருந்​திருந்​தால் இங்​கிலாந்து அணியை 2-வது நாள் ஆட்​டத்​தின் போதே குறைந்த ரன்​களில் கட்​டுப்​படுத்தி பெரிய அளவில் முன்​னிலையை பெற்​றிருக்க முடி​யும். 2-வது இன்​னிங்​ஸில் இந்​திய அணி​யின் நடு​வரிசை மற்​றும் பின் வரிசை பேட்​டிங்​கில் கை கொடுத்​திருந்​தால் மேற்​கொண்டு 100 ரன்​கள் சேர்த்து இங்​கிலாந்து அணிக்கு அழுத்​தம் கொடுக்க முயற்சி செய்திருக்கலாம்.

பின் வரிசை பேட்​ஸ்​மேன்​கள் ஆட்​ட​மிழப்​ப​தில் தவறு இல்​லை. ஆனால் எதிர் முனை​யில் முறை​யான பேட்​ஸ்​மேன் இருக்​கும் நேரத்​தில் அவருக்கு உறு​துணை​யாக இருப்​ப​தற்​கான வழியை கண்​டறி​யாமல் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​தாத பந்து வீச்​சுக்கு எதி​ராக பெரிய அளவி​லான ஷாட்​களை விளை​யாட முயன்று எளி​தான முறை​யில் விக்​கெட்​களை இழப்​பது என்​பது பொறுப்​பின்​மை​யையே காட்​டு​கிறது.

அறி​முக கேப்​ட​னாக ஷுப்​மன் கில் தனது பணியை திறம்பட செய்​தாரா என்​பது கேள்விக்​குறியே. கல்லி திசை​யில் பல முறை ஜெய்​ஸ்​வால் கேட்ச்​களை தவற​விட்ட போதி​லும் அவரை அங்​கிருந்து மாற்​று​வதற்​கான எந்​த​வித முனைப்​பை​யும் ஷுப்​மன் கில் காட்​ட​வில்​லை. மேலும் களத்​தில் ரிஷப் பந்த், கே.எல்​.​ராகுல் ஆகியோரே பெரும்​பாலும் பீல்​டிங் மற்​றும் களவியூ​கங்​கள் அமைப்​ப​தில் பந்து வீச்​சாளர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​யதை காண முடிந்​தது.

பந்து வீச்​சாளர்​கள், பீல்​டர்​கள் தவறு செய்​தால் களத்​திலேயே கண்​டிப்​புடன் செயல்​பட்டு அவர்​களை உத்​வேகப்​படுத்தி ஆட்​டத்​தில் துடிப்​புடன் செயல்​படு​வதற்​கான ஊக்​கி​யாக கேப்​டன் செயல்பட வேண்​டும். இந்த விஷ​யத்​தில் ஷுப்​மன் கில் மென்​மை​யாக நடந்​து​கொள்​வது போன்று உள்​ளது. வீரர்​களின் ஓய்​வறை​யில் நல்ல சூழ்​நிலை​யும் மரி​யாதை​யும் இருப்​பது சிறந்த விஷ​யம்​தான். ஆனால் கேப்​டன் பற்றி சிறிது பயமும் இருக்க வேண்​டும். அது​தான் வெற்​றிக்​கான வேட்​கையை முன்​னெடுக்​கும்.

இந்​திய அணி தோற்க முடி​யாத டெஸ்​டில் தோற்​றதற்கு பின் வரிசை பேட்​டிங் மட்​டுமே முக்​கிய காரணம் என்​றும் கூறி​விட முடி​யாது. ஷுப்​மன் கில் களத்​தில் கேப்​ட​னாக தீவிர​மாக செயல்​பட​வேண்​டிய கட்​டத்​தில் சரி​யான வியூ​கங்​கள் அமைக்க தவறியதும் சரிவுக்கு வழி​வகுத்​தது. கடைசி நாள் ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணி​யின் வெற்​றிக்கு 350 ரன்​கள் தேவை​யாக இருந்த நிலை​யில் பந்து வீச்​சில் தொடர்ச்​சி​யாக அழுத்​தம் கொடுக்​கக்​கூடிய அளவி​லான ஸ்பெல்லை அமைப்​ப​தில் இந்​திய அணி எந்​த​வித திட்​ட​மும் இல்​லாமல் செயல்​பட்​டது.

ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் வேகக்​ கூட்​டணி ஒருவிக்​கெட் கூட கைப்​பற்ற முடி​யாமல் போனது ஏமாற்​ற​மாக அமைந்​தது. தொடக்​கத்​தில் முகமது சிராஜ் அச்​சுறுத்​தல் கொடுத்​தார். ஆனால் 42 ஓவர்​கள் முதல் 80 ஓவர்​கள் வரை அவர், பந்​து​வீச அழைக்​கப்​பட​வில்​லை. மேலும் ஜஸ்​பிரீத் பும்ரா கடைசி​யாக 65-வது ஓவரை வீசி​னார். அதன் பின்​னர் ஆட்​டத்​தின் இறு​திப் பகு​தி​யில்அவர், வெளியே அமர்ந்​திருந்​தார். பந்​து​வீச உள்ளே வரவில்​லை.

இங்​கிலாந்து அணி 82-வது ஓவரில்​தான் வெற்​றியை எட்​டியது. இந்த 17 ஓவர்​களில்​தான் இங்​கிலாந்து அணி 85 ரன்​களை விளாசி​யது. தொடரில் இந்​திய அணி 0-1 என பின்​தங்கி இருக்​கும் நிலை​யில் 2-வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 2-ம் தேதி பர்​மிங்​காமில் தொடங்​கு​கிறது. போது​மான ஓய்வு உள்​ள​தால் இந்த போட்​டிக்​கு கேப்​டன்​ ஷுப்​மன்​ கில்​லும்​, பயிற்​சி​யாளர்​ கவுதம்​ கம்​பீரும்​ பு​திய ​வியூகங்​களை வகுப்​பது அவசியம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x