Published : 24 Jun 2025 07:11 AM
Last Updated : 24 Jun 2025 07:11 AM
லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இந்திய அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் பும்ரா ஓர் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்துவது இது 14-வது முறையாகும். இந்நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா கூறியதாவது:
இத்தனை வருடங்களாக சிலர், நான் 8 மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் என்றார்கள், சிலர் 10 மாதங்கள் என்றார்கள், ஆனால் இப்போது நான் 10 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டிலும், 12 முதல் 13 ஆண்டுகள் ஐபிஎல்லிலும் விளையாடியுள்ளேன்.
ஒவ்வொரு முறையும் நான் காயம் அடையும் போதெல்லாம் அவர், கதை முடிந்தது, அவ்வளவுதான், இனிமேல் அணியில் இடம் பெறமாட்டார் என்றே கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதை கூறட்டும் நான் என் வேலையைச் செய்கிறேன். ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் இதுபோன்ற விஷயங்கள் நிகழும். ஆனால் எல்லாம் வல்ல இறைவன் விரும்பும் வரை, நான் விளையாடுவேன்.
என்னால் முடிந்தவரை தயாராகுகிறேன்.பின்னர் அவர், எனக்கு எவ்வளவு ஆசீர்வாதங்களை வழங்குவார் என்பதை கடவுளிடம் விட்டுவிடுவேன். என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன கூறவேண்டும் என்பது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. என்னைப் பற்றி இப்படி எழுதாதீர்கள் என அவர்களுக்கு நான் அறிவுரை கூற முடியாது. என்னுடைய பெயரை தலைப்புச் செய்தியாக்கி அவர்கள் வாசகர்களைக் கவர்கிறார்கள். ஆனால், அதில் எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.
தற்போது வரை லீட்ஸ் மைதானம் பேட்டிங்கிற்கு சிறப்பாக உள்ளது. ஆடுகளத்தில் பந்துகள் இருவிதமான வேகத்தில் செல்கின்றன, பூதம் ஏதும் இல்லை. வானிலை காரணமாக, புதிய பந்து ஸ்விங் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்பார்க்கப்படுவது இதுதான். நாங்கள் பெரிய ஸ்கோரை எடுத்து சவுகரியமான நிலையில் இருக்க விரும்புகிறோம்.
இவ்வாறு ஜஸ்பிரீம் பும்ரா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT