Published : 23 Jun 2025 08:03 AM
Last Updated : 23 Jun 2025 08:03 AM

பும்ரா, பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு: 465 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழப்பு

லீட்ஸ்: இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து அணி 465 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்​பிரீத் பும்​ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபார​மாக பந்​து​வீசி விக்​கெட்​களைச் சாய்த்​தனர்.

இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்​தில் கடந்த 20-ம் தேதி தொடங்​கியது. முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 471 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி சார்​பில் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 101, கேப்​டன் ஷுப்​மன் கில் 147, ரிஷப் பந்த் 134 ரன்​கள் குவித்​தனர். இங்​கிலாந்து அணி தரப்​பில் டங், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 4 விக்​கெட்​களை​யும், பிரைடன் கார்​ஸ், ஷோயிப் பஷீர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் வீழ்த்​தினர்.

இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடத் தொடங்​கிய இங்​கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 3 விக்​கெட் இழப்​புக்கு 209 ரன்​கள் எடுத்​திருந்​தது.

இந்​நிலை​யில், நேற்​றைய 3-வது நாள் ஆட்​டத்தை ஆலி போப் 100 ரன்​களு​ட​னும், ஹாரி புரூக் ரன் எடுக்​காமலும் தொடங்​கினர்.

மேற்​கொண்டு 6 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஆலி போப், பிரசித் கிருஷ்ணா பந்​து​வீச்​சில் ரிஷப் பந்த்​திடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். அவர் 137 பந்​துகளில் 106 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து விளை​யாட வந்த கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் நிதான​மாக விளை​யாடி 52 பந்​துகளில் 20 ரன்​கள் எடுத்த நிலை​யில், சிராஜ் பந்​து​வீச்​சில் வீழ்ந்​தார்.

இதன் பின்​னர் ஜோடி சேர்ந்த ஜேமி ஸ்மித்​தும், ஹாரி புரூக்​கும் அதிரடி​யாக விளை​யாடத் தொடங்​கி​னார். ஜேமி ஸ்மித் 52 பந்​துகளில் 40 ரன்​கள் சேர்த்த நிலை​யில், பிரசித் கிருஷ்ணா பந்​து​வீச்​சில் வீழ்ந்​தார். இதைத் தொடர்ந்து விளை​யாட வந்த கிறிஸ் வோக்​ஸும் அதிரடி​யாக விளை​யாடி​னார்.

மறு​முனை​யில் அபார​மாக விளை​யாடிய ஹாரி புரூக் சதமெடுக்க ஒரு ரன் தேவைப்​பட்ட நிலை​யில், பிரசித் கிருஷ்ணா பந்​தில் துர​திருஷ்ட​வச​மாக ஆட்​ட​மிழந்​தார். 112 பந்​துகளில் 2 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 99 ரன்​களைச் சேர்த்​தார் அவர்.

கிறிஸ் வோக்ஸ் 38, பிரைடன் கார்ஸ் 22, ஜோஷ் டங் 11 ரன்​கள் எடுத்து வீழ்ந்​தனர். ஷோயிப் பஷீர் ஒரு ரன்​னுடன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இதையடுத்து 465 ரன்​களில் இங்​கிலாந்​தின் முதல் இன்​னிங்ஸ் முடிவுக்கு வந்​தது. பும்ரா 5 விக்​கெட்​களை​யும், பிரசித் கிருஷ்ணா 3 விக்​கெட்​களை​யும், சிராஜ் 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய இந்திய அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரைடன் கார்ஸ் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து அவர் வீழ்ந்தார். சாய் சுதர்ஷன் 48 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் க்ராலி வசம் பிடிகொடுத்து அவர் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 47 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 6 ரன்களும் எடுத்திருந்தனர்.

கருப்புப் பட்டை: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் சைட் லாரன்ஸ் (வயது 61) நேற்று காலமானார். இதைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய, இங்கிலாந்து அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

2-வது முறையாக 450 பிளஸ்: இங்கிலாந்தின் ஹெடிங்லி மைதானத்தில் 2-வது முறையாக இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 450-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளன. ஹெடிங்லி மைதானம் கட்டப்பட்ட 70 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே 450-க்கும் மேற்பட்ட ரன்களை முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் குவித்துள்ளன. இதற்கு முன்பு 2006-ல் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 515 ரன்களும், பாகிஸ்தான் 538 ரன்களும் குவித்தன. இந்த டெஸ்டில் இங்கிலாந்து 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4 கேட்சுகள்: முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சில் 4 கேட்சுகளை இந்திய வீரர்கள் கோட்டை விட்டனர். 3 கேட்சுகளை யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ஒரு கேட்ச்சை ரவீந்திர ஜடேஜாவும் கோட்டை விட்டனர்.

12 முறை: வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை, முன்னாள் கேப்டன் கபில் தேவுடன், பும்ரா பகிர்ந்துகொண்டார். கபில்தேவ் 66 டெஸ்ட் போட்டிகளில் 12 முறையும், பும்ரா 34 டெஸ்ட் போட்டிகளில் 12 முறையும் 5 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்த வரிசையில் இஷாந்த் சர்மா 9 முறையும், ஜாகீர் கான் 8 முறையும், இர்பான் பதான் 7 முறையும் 5 விக்கெட்களை வெளிநாட்டு மைதானங்களில் சாய்த்துள்ளனர்.

3-வது வீரர்: ஹெடிங்லி மைதானத்தில் 99 ரன்களில் ஆட்டமிழந்த 3-வது வீரராக ஹாரி புரூக் மாறியுள்ளார். இதற்கு முன்பு 1987-ல் சலீம் மாலிக்கும் (பாகிஸ்தான்), 1994-ல் மைக்கேல் ஆதர்டனும் (இங்கிலாந்து) 99 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் 99 ரன்களில் வீழ்ந்த 2-வது இங்கிலாந்து வீரராக புரூக் உள்ளார்.இதற்கு முன்பு 2001-ல் மொஹாலியில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் டிரஸ்கோத்திக் 99 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x