Published : 22 Jun 2025 01:37 AM
Last Updated : 22 Jun 2025 01:37 AM

மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டியில் திண்டுக்கல் - நாமக்கல் மோதல்

சென்னை: தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் முன்​னாள் செய​லா​ளர் டி.ஆர். கோவிந்​த​ராஜனின் நினை​வாக, தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் சார்​பில் ஜூனியர் மகளிர் மாநில கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்டி திண்​டுக்​கலில் நடை​பெற்று வரு​கிறது. 19 அணி​கள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் ஆட்​டங்​களின் முடி​வில் சேலம், திருநெல்​வேலி, சென்​னை, நாமக்​கல், திரு​வாரூர், காஞ்​சிபுரம், திண்​டுக்​கல், திரு​வாரூர் ஆகிய அணி​கள் கால் இறுதிக்கு முன்​னேறின.

நேற்று நடை​பெற்ற முதல் கால் இறுதி ஆட்​டத்​தில் சேலம் 3-0 என்ற கோல் கணக்​கில் சென்னை அணியை வீழ்த்​தி​யது. சேலம் அணி சார்​பில் வர்ஷா 2 கோல்​களும், காவ்யா ஒரு கோலும் அடித்​தனர். 2-வது கால் இறுதி ஆட்​டத்​தில் நாமக்​கல் அணி 1-0 என்ற கோல் கணக்​கில் திருநெல்​வேலி அணியை தோற்​கடித்​தது. நாமக்​கல் அணி தரப்​பில் துர்கா கோல் அடித்​தார்.

3-வது கால் இறுதி ஆட்​டத்​தில் திரு​வாரூர் 6-1 என்ற கோல் கணக்​கில் காஞ்​சிபுரம் அணியை வீழ்த்​தி​யது. திரு​வாரூர் அணி சார்​பில் தர்​ஷினி 2 கோல்​கள் அடித்​தார். ஐஸ்​வர்​யா, தர்​ஷி​கா, சஹா​னா, அனு (சுயகோல்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர். 4-வது கால் இறுதி ஆட்​டத்​தில் திண்​டுக்​கல் 5-0 என்ற கோல் கணக்​கில் திரு​வள்​ளூர் அணியை தோற்​கடித்​தது. திண்​டுக்​கல் அணி சார்​பில் பிர​திக் ஷா 4, காவியா ஒரு கோல் அடித்​தனர்.

இதைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. முதல் அரை இறு​தி​யில் நாமக்​கல் 1-0 என்ற கோல் கணக்​கில் சேலம் அணி தோற்​கடித்​தது. நாமக்​கல் அணி தரப்​பில் துர்கா கோல் அடித்து அசத்​தி​னார். 2-வது அரை இறு​தி​யில் திண்​டுக்​கல் - திரு​வாரூர் அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் 2-2 என்ற கோல் கணக்​கில் டிரா ஆனது. திண்​டுக்​கல் அணி தரப்​பில் பிர​திக் ஷா 2 கோல்​கள் அடித்​தார். திரு​வாரூர் அணி சார்​பில் சஹா​னா, தர்​ஷினி தலா ஒரு கோல் அடித்​தனர். வெற்​றியை தீர்​மானிக்க நடத்​தப்​பட்ட சடன் டெத்​தில் திண்​டுக்​கல் அணி 8-7 என்ற என்ற கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டி​யில் கால்​ப​தித்​தது.

இன்று மாலை 3 மணி அளவில் எஸ்​டிஏடி மைதானத்​தில் நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் திண்​டுக்​கல்​ - நாமக்​கல்​ அணி​கள்​ பலப்​பரீட்​சை நடத்​துகின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x