Published : 21 Jun 2025 04:32 PM
Last Updated : 21 Jun 2025 04:32 PM
ஹெடிங்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முந்தைய முடிவுகளை முன்வைத்து இங்கிலாந்து கேப்டன் தவறாக இந்திய அணியை பெட் செய்ய அழைத்ததில் இந்தியா அபாரமாக ஆடி ஜெய்ஸ்வால், கேப்டன் கில் சதங்களுடனும், ரிஷப் பந்தின் அதிரடியுடனும் முதல் நாளில் 359 ரன்களைக் குவித்தது. முதல் நாள் ஆட்டத்தில் சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.
ஒரே நாளில் ஹெடிங்லேயில் 359 ரன்களை எடுத்தது இந்திய அனியின் புதிய உச்சமாகும். அதாவது, இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் டெஸ்ட் போட்டியில் எடுத்த அதிக ரன்களாகும் இது. இதற்கு முன்பாக 2022-ல் எட்ஜ்பாஸ்டனில் 338 ரன்களை ஒரே நாளில் எடுத்தது. மேலும், இங்கிலாந்துக்கு பயணம் செய்த அணிகளில் ஒரே நாளில் 359 ரன்கள் என்பது இரண்டாவது பெரிய தொடக்க நாள் ஸ்கோராகும். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா 2003-ல் 362/4 என்று எடுத்ததே அதிகபட்சம்.
கேப்டன்சியில் அறிமுகப் போட்டியிலேயே சதம் எடுத்த வீரர்கள் ஐவரில் ஷுப்மன் கில்லும் ஒருவர். விஜய் ஹசாரே 1951-ல் 164 ரன்களை எடுத்தார். 2014-ல் விராட் கோலி 141 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டன்சி அறிமுக டெஸ்ட்டில் எடுத்தார். இதைத் தவிர சுனில் கவாஸ்கர் நியூஸிலாந்துக்கு எதிராகவும், வெங்சர்க்கார் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரகவும் கேப்டன்சி அறிமுகத்தில் சதம் எடுத்துள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தன் 3-வது அயல்நாட்டுச் சதத்தை எடுத்தார். இவருக்கு முன்பாக சையத் முஷ்டாக் அலிதான் இளம் வயதில் இங்கிலாந்தில் தான் ஆடும் முதல் டெஸ்ட்டில் சதம் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார் . 1936-ல் சையத் முஷ்டாக் அலி இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
கருண் நாயரின் கடைசியாக டெஸ்ட் போட்டியை ஆடியதற்கும் இந்தப் போட்டியை ஆடுவதற்கும் இடையே இந்திய அணி 402 சர்வதேசப் போட்டிகளை ஆடியுள்ளது. ஒரு வீரரின் இரு காலக்கட்ட டெஸ்ட் ஆட்ட வருகைக்கு இடையில் இது அதிகமான சர்வதேசப் போட்டிகளுக்கான இடைவெளி ஆகும். கருண் நாயர் இதில் 77 டெஸ்ட் போட்டிகளை மிஸ் செய்துள்ளார்.
சாய் சுதர்சன் நம்பர் 3-இல் இறங்கி அறிமுகப் போட்டியில் டக் அவுட் ஆன முதல் இந்திய வீரர் ஆனார். டாப் 3 இந்திய வீரர்களில் அறிமுக டெஸ்ட் போட்டியில் டக் அடித்த இந்திய வீரர்கள் 6 பேரில் சாய் சுதர்சனும் ஒருவர்.
இன்னொரு சுவாரஸ்யமான புள்ளி விவரம் என்னவெனில் 1990-க்குப் பிறகு முதல் தர கிரிக்கெட்டில் குறைவான சராசரி வைத்திருந்த ஒருவர் டெஸ்ட் அறிமுகம் காண்பது சாய் சுதர்சன் தான். அவரது முதல் தர கிரிக்கெட் சராசரி 39.93. இவருக்கு முன்னதாக விருத்திமான் சஹா முதல் தர கிரிக்கெட்டில் 35 ரன்களே சராசரி வைத்திருந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆனார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT