Published : 19 Jun 2025 02:03 AM
Last Updated : 19 Jun 2025 02:03 AM
லீட்ஸ்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி விளையாட உள்ள முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியிருப்பதாவது:
விராட் கோலியின் போராட்ட மனப்பான்மை, அவரது போட்டித்திறன் மற்றும் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது விருப்பம் ஆகியவற்றை இந்திய அணி இழக்கப் போகிறது. விராட் கோலி 18-ம் எண் சீறுடையை தனது சொந்தமாக்கிக் கொண்டார். எந்த இந்திய வீரர்களின் சட்டையின் பின்புறத்திலும் 18-ம் எண்ணைப் பார்க்காமல் இருப்பது சற்று வித்தியாசமாக இருக்கும், ஆனால் அவர், நீண்ட காலமாக அவர்களுக்குப் பிடித்தவராக இருந்து வருகிறார்.
விராட் கோலிக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்புவதால், அவருக்கு எதிராக விளையாடாமல் இருப்பது அவமானமாக இருக்கும் என்று நான் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவதை விரும்புகிறோம், ஏனென்றால் நாங்கள் களத்தில் இருக்கும்போது ஒரே மனநிலையைக் கொண்டுள்ளோம். இது ஒரு போர். இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT