Published : 18 Jun 2025 11:39 PM
Last Updated : 18 Jun 2025 11:39 PM
லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் கலவைதான் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் என இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர். அவர் என்ன சொல்லியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) அன்று தொடங்குகிறது. முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி என அடுத்தடுத்து இரண்டு முக்கிய வீரர்கள் ஓய்வு அறிவித்த நிலையில் ஷுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கேப்டன் ஷுப்மன் கில் குறித்து பட்லர் பேசியுள்ளார். இருவரும் அண்மையில் முடிந்த ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தனர். அந்த அணியை ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்தி இருந்தார்.
“ஷுப்மன் கில்லை பிரமிக்க வைக்கவும் கிரிக்கெட் வீரர்கள், ஈர்க்கக்கூடிய இளம் மனிதர் என சொல்லலாம். அவர் பெரும்பாலும் அமைதியாக இருப்பார். அவர் பேசினாலும் அது அளவோடு தான் இருக்கும். ஆனால், களத்தில் அவரோடு அவரே சண்டை செய்வார். ரோஹித் மற்றும் கோலியின் கலவை என நான் அவரை நினைக்கிறேன்.
கோலி மிகவும் ஆக்ரோஷமானவர். அவர் இந்திய அணியை முற்றிலுமாக மாற்றினார். ரோஹித் அப்படியே அதற்கு நேர்மாறானவர். அமைதியாக, கூலாக இருப்பார். அவர்கள் இருவரிடம் இருந்தும் ஷுப்மன் கில் அதிகம் கற்றுள்ளார். இருந்தாலும் களத்தில் அவர் தனது இயல்பில் இயங்குவார். தனது ரோலை இரண்டாவது பிரித்து கில் கையாள வேண்டும். பேட் செய்யும் போது வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்க வேண்டும். மற்ற நேரங்களில் கேப்டன் பணியை செயல்படுத்தலாம்” என பட்லர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT