Published : 16 Jun 2025 07:38 AM
Last Updated : 16 Jun 2025 07:38 AM

வில்​லி​யம்​ஸனின் கனவு அணி​யில் சச்​சின்!

ஹாமில்​டன்: நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் கேன் வில்​லி​யம்​ஸனின் கனவு அணி​யில் கிரிக்​கெட் ஜாம்​ப​வான் சச்​சின் டெண்​டுல்​கர் உட்பட 3 இந்​திய வீரர்​கள் இடம்​பிடித்​துள்​ளனர்.

நியூஸிலாந்து நட்​சத்​திர வீரரும், அந்த அணி​யின் முன்​னாள் கேப்​ட​னு​மான கேன் வில்​லி​யம்​ஸன், 21-ம் நூற்​றாண்​டில் டெஸ்ட் கிரிக்​கெட்​டில் சிறந்து விளங்​கிய மிகச் சிறந்த வீரர்​களை கொண்டு அணியை உரு​வாக்கி அறி​வித்​துள்​ளார். அந்த அணி​யில் சச்​சின் டெண்​டுல்​கர், எம்​.எஸ். தோனி, வீரேந்​திர சேவாக் ஆகிய 3 இந்​திய வீரர்​களை சேர்த்​துள்​ளார். ஆனால் அந்த அணி​யில் தனது பெயரைச் சேர்க்​க​வில்​லை.

வில்​லி​யம்​ஸன் தேர்வு செய்த 21-ம் நூற்​றாண்​டின் சிறந்த டெஸ்ட் அணி விவரம்: மேத்யூ ஹேடன் (ஆஸ்​திரேலி​யா), வீரேந்​திர சேவாக்​(இந்​தி​யா), ரிக்கி பான்​டிங்​(ஆஸ்​திரேலி​யா), சச்​சின்​(இந்​தி​யா), ஸ்டீவ் ஸ்மித்​(ஆஸ்​திரேலி​யா), ஏபி டி வில்​லியர்​ஸ்​(தென் ஆப்​பிரிக்​கா), மகேந்​திரசிங் தோனி(இந்​தி​யா), டேல் ஸ்டெ​யின்​(தென் ஆப்​பிரிக்​கா), ஷோயப்​ அக்​தர்​(​பாகிஸ்​தான்​), ​ மெக்​ராத்​(ஆஸ்​திரேலி​யா), ​முரளிதரன்​ (இலங்​கை).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x