Published : 01 Jun 2025 09:07 AM
Last Updated : 01 Jun 2025 09:07 AM

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜன்னிக் சின்னர்

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் 34-ம் நிலை வீரரான ஜிரி லெஹெக்காவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 5-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜாக் டிராப்பர் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 65-ம் நிலை வீரரான பிரேசிலியின் ஜோவோ போன்சேகா

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 96-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரௌசோவாவையும், 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 32-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவையும் வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x