Published : 29 May 2025 06:03 AM
Last Updated : 29 May 2025 06:03 AM
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜாஸ்மின் பவுலினி, லாரேன்ஸா முசெட்டி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 8-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டி 6-4, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
7-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-2, 4-6, 1-6, 0-6 என்ற செட் கணக்கில் 41-ம் நிலை வீரரான போர்ச்சுகலின் நுனோ போர்கஸிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் 56-ம் நிலை வீரரான ஹங்கேரியின் ஃபேபியன் மரோசானை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லாவை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT