Published : 27 Apr 2025 08:36 AM
Last Updated : 27 Apr 2025 08:36 AM

மொத்த அணியும் ஓட்டை என்றால் எப்படி அடைப்பது? - மனம் திறக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்தில் வீழ்த்​தி​யது சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் மோதின. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.5 ஓவர்​களில் 154 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக டெவால்ட் பிரே​விஸ் 25 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 42 ரன்​களும், ஆயுஷ் மாத்ரே 19 பந்​துகளில், 6 பவுண்டரிகளுடன் 30 ரன்​களும் விளாசினர். ஹைத​ரா​பாத் அணி சார்​பில் பந்து வீச்​சில் ஹர்​ஷால் படேல் 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். பாட் கம்​மின்​ஸ், ஜெயதேவ் உனத்​கட் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் முகமது ஷமி, கமிந்து மெண்​டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

155 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 18.4 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 155 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்​றில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் சிஎஸ்​கேவை ஹைத​ரா​பாத் அணி வீழ்த்​து​வது இதுவே முதன்​முறை​யாகும். இதற்கு முன்​னர் 5 ஆட்​டங்​களி​லும் தோல்வி கண்​டிருந்​தது.

ஹைத​ரா​பாத் அந்த அணி தரப்​பில் அதி​கபட்​ச​மாக இஷான் கிஷன் 34 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​களும், கமிந்து மெண்டிஸ் 22 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​களும் விளாசினர். சிஎஸ்​கேவுக்கு இது 7-வது தோல்​வி​யாக அமைந்​தது. 9 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 2 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் கடைசி இடத்​தில் தொடர்கிறது. இந்த தோல்​வி​யால் சிஎஸ்கே அணி ஏறக்​குறைய பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​விட்​டது.

போட்​டிக்கு பின்​னர் சிஎஸ்கே அணி​யின் கேப்​டன் எம்​.எஸ்​.தோனி கூறிய​தாவது: நாங்​கள் விக்​கெட்​களை இழந்​து​கொண்டே இருந்​தோம். முதல் இன்​னிங்​ஸில் பேட்​டிங் செய்ய ஆடு​களம் சற்று சிறப்​பாக இருந்​தது. ஆனால் 155 ரன்​கள் என்​பது நியா​யம் சேர்க்​கக்​கூடியதல்ல. 8 முதல் 10 ஓவர்களுக்கு வேகப்​பந்து வீச்​சாளர்​களுக்கு ஆடு​களம் இரு​வித​மாக செயல்​படத் தொடங்​கியது. ஆனால் வழக்​கத்​துக்கு மாறாக ஏதும் இல்​லை.

நாங்​கள் இன்​னும் கூடு​தலாக ரன்​கள் சேர்த்​திருக்​கலாம். 2-வது இன்​னிங்​ஸில் சுழற்​பந்து வீச்​சுக்கு ஆடு​களம் சிறிது உதவியது. எங்​கள் சுழற்​பந்து வீச்​சாளர்​கள் சரி​யான பகு​தி​களில் வீசி​னார்​கள். இதனால் பந்துகள் சற்று நின்று வந்​தன. ஆனால் நாங்​கள் 15-20 ரன்​கள் குறை​வாக இருந்​தோம்.

டெவால்ட் பிரெ​விஸ் நன்​றாக பேட்​டிங் செய்​தார். எங்​களுக்கு மிடில் ஆர்​டரில் இது​போன்ற பேட்​டிங்கே தேவை. மிடில் ஓவர்​களில் சுழற்​பந்து வீச்சாளர்​கள் வீச வரும்​போது நாங்​கள் சற்று சிரமப்​பட்​டோம். திறன் மற்​றும் டெக்​னிக் மூலம் அதை செய்ய வேண்​டும், உங்​கள் பகு​தியை தேர்ந்தெடுக்க வேண்​டும் அல்​லது உங்​கள் பகு​தி​யில் பெரிய ஷாட்டை விளை​யாட முயற்​சிக்க வேண்​டும்.

மிடில் ஆர்​டரில் நல்ல வேகத்​தில் வீசும் சுழற்​பந்து வீச்​சாளர்​களுக்கு எதி​ராக ரன்​களை குவிக்​கவோ, ஆதிக்​கம் செலுத்​தவோ எங்​களால் முடியவில்லை, அந்த இடங்​களில் தேக்க நிலையை சந்​தித்​தோம். இது போன்ற ஒரு தொடரில் துளை​களை அடைக்​கக்​ கூடிய ஒன்று அல்​லது இரண்டு பகுதி​கள் இருந்​தால் அது நல்​லது, ஆனால் பெரும்​பாலான வீரர்​கள் சிறப்​பாக செயல்​பட​வில்லை என்​றால், அது மிக​வும் கடினம்.

அணி​யில் மாற்​றங்​கள் மேற்​கொள்​ளும் போது திட்​டம் வேலை செய்​ய​வில்லை என்​றால் அடுத்த ஒன்​றுக்​குச் செல்ல வேண்​டும். 4 பேர் ஒரே நேரத்தில் செயல்திறனை வெளிப்​படுத்​த​வில்லை என்​றால் மாற்​றத்தை செய்ய வேண்டிய கட்​டா​யம் ஏற்​படு​கிறது. ஏனென்றால் நீங்​கள் தொடர்ந்து முன்​னேறி செல்ல முடி​யாது.

நாங்​கள் போது​மான ரன்​களை சேர்க்​க​வில்​லை. இதனால் மாற்​றம் அவசி​ய​மாகிறது. டி 20 ஆட்​டத்​தின்​ போக்​கு ​மாறி​விட்​டது. எப்​போதும்​ 180 முதல்​ 200 ரன்​களை எடுக்​க வேண்​டும் என்​று ​நான்​ கூற​வில்​லை, ஆ​னால்​ ஆட்​டத்​தின்​ நிலை​மை​களை மதிப்​பிட்​டு, ரன்​கள்​ சேர்​ப்​ப​தில்​ கவனம்​ செலுத்​த வேண்​டும்​. இவ்​​வாறு தோனி கூறி​னார்​.

19 முறை மாற்றங்கள்: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடந்த காலங்​களில் வழக்​க​மாக விளை​யாடும் லெவனில் பெரிய அளவில் மாற்றங்களை செய்​தது கிடை​யாது. ஆனால் நடப்பு சீசனில் அந்த அணி 9 ஆட்​டங்​களில் 19 மாற்​றங்​களை மேற்​கொண்​டது. எனினும் இது​வரை வெற்​றிக்​கான அணிச்​சேர்க்​கையை கண்​டு​பிடிக்க முடி​யாமல் திணறி வரு​கிறது.

வெளி​நாட்டு வீரர்​களில் டேவன் கான்​வே, ரச்​சின் ரவீந்​தி​ரா, சேம் கரண், ஜேமி ஓவர்​டன், நேதன் எல்​லிஸ், மதீஷா பதிரனா ஆகியோ​ரும் இந்​திய வீரர்​களில் ராகுல் திரி​பா​தி, தீபக் ஹூடா, ஷிவம் துபே, விஜய் சங்​கர், ரவிச்​சந்​திரன் அஸ்​வின், முகேஷ் சவுத்ரி ஆகியோ​ரும் எந்​த​வித தாக்கத்தையும் ஏற்​படுத்​த​வில்​லை.

ஒட்​டுமொத்த அணி​யில் ஆந்த்ரே சித்​தார்த், வன்ஷ் பேடி, ராமகிருஷ்ண கோஷ், ஸ்ரே​யாஸ் கோபால், கமலேஷ் நாகர்​கோட்டி ஆகிய 5 பேருக்கு மட்​டுமே இன்​னும் வாய்ப்​பு கிடைக்​க​வில்​லை.

சூப்பர்மேன் கமிந்து மெண்டிஸ்: ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் அதிரடி பேட்​ஸ்​மே​னான டெ​வால்ட் பிரேவிஸ், ஹர்​ஷால் படேல் வீசிய பந்தை லாங் ஆஃப் திசை​யில் விளாசிய போது எல்​லைக்​கோட்​டுக்கு அருகே கமிந்து மெண்​டிஸ் பாய்ந்து இரு கைகளால் அற்​புத​மாக கேட்ச் செய்​தார். இந்த கேட்ச்​தான் ஆட்​டத்​தில் பெரிய திருப்​பு​முனையை ஏற்​படுத்​தி​யது.

ஏனெனில் டெவால்ட் பிரே​விஸ் 25 பந்​துகளில் 42 ரன்​கள் விளாசி அச்​சுறுத்​தலாக திகழ்ந்​தார். முதல் 17 பந்​துகளில் 17 ரன்​கள் மட்​டுமே சேர்த்திருந்த அவர், இதன் பின்​னர் கமிந்து மெண்​டிஸ் வீசிய 12-வது ஓவரில் 3 சிக்​ஸர்​களை பறக்​க​விட்டு மிரட்​டி​யிருந்​தார்.

தொடர்ந்து ஹர்​ஷால் படேல் வீசிய அடுத்த ஓவரின் 4-வது பந்தை சிக்​ஸருக்கு விளாசிய பிரே​விஸ் அடுத்த பந்தை சிக்​ஸருக்கு அடிக்க முயன்றபோது​தான் கமிந்து மெண்​டிஸின் வியத்​தகு கேட்ச்​சால் ஆட்​ட​மிழந்​தார். இதன் பின்​னரே சிஸ்கே அணி சரிவை சந்​தித்​திருந்​தது. பீல்டிங்கில் அசத்திய கமிந்து மெண்​டிஸ் பேட்​டிங்​கிலும் நிதான​மாக விளை​யாடி 32 ரன்​கள் சேர்த்து வெற்​றிக்​கான பங்​களிப்பை வழங்​கி​னார். ​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x